For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீட் உறுதியானால் மட்டுமே டிக்கெட்.. நோ வெய்ட்டிங்! இந்திய ரயில்வே அதிரடி திட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: கன்பார்ம் டிக்கெட்டுகளை மட்டுமே வினியோகித்துவிட்டு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளை வழங்காமல் தவிர்க்க இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ரயில்வே, கன்பார்ம், ஆர்ஏசி மற்றும் வெய்ட்டிங் ஆகிய 3 வகைகளில் டிக்கெட் வழங்குகிறது. வெய்ட்டிங் டிக்கெட் வைத்துள்ளோர் அது எப்போது கன்பார்ம் ஆகும் என்று கடைசி வரை வயிற்றில் புளி கரைக்க காத்திருக்கின்றனர். இதனால் பஸ் போன்ற வேறு வாகனங்களில் டிக்கெட் புக் செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் பலரும் நொந்து நூடுல்ஸ் ஆகின்றனர்.

Good news! Railways to give passengers only confirm tickets now

இந்நிலையில்தான் ரயில்வேதுறை இதுவரை இருந்துவந்த பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டுள்ளது. இனிமேல் கன்பார்ம் மற்றும் ஆர்ஏசி டிக்கெட் மட்டுமே வழங்குவது என்றும், வெய்ட்டிங் டிக்கெட் என்ற நடைமுறையை ஒழிப்பது என்றும் திட்டமிட்டுள்ளது.

இதற்காக 'சுவிதா ரயில்கள்' என்ற பெயரில் ப்ரீமியம் ரயில்களை ஜூலை மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வகை ரயில்களில் வெய்ட்டிங் டிக்கெட்டுகள் இருக்காது. இதன் வெற்றியை பொறுத்து பிற ரயில்களுக்கும் படிப்படியாக இத்திட்டத்தை அமல் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது. என்ன ஹேப்பியா?

English summary
Soon, waiting train tickets will be the things of the past. Reportedly, Railways will give only confirmed tickets to passengers in 'Suvidha trains'. These trains will come into force in the first week of July.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X