For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலநடுக்கத்தில் சிக்கி... எவரெஸ்ட் பனிக்குள் உறைந்து போன கூகுள் என்ஜினியர்!

Google Oneindia Tamil News

காத்மாண்டு: கூகுள் நிறுவனத்தின் என்ஜினியரும், மலையேற்ற வீரருமான டேன் ப்ரடின்பர்க், நேபாள நிலநடுக்கத்தினால் எவரெஸ்ட் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 2007ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் என்ஜினியாராக பணிக்கு சேர்ந்தவர் டேன் ப்ரடின்பர்க். தன்னை கூகுள் சாகசக்காரன் (Google Adventurer) என்றே டேன் ப்ரடின்பர்க் கூறிக் கொள்வார்.

'Google Adventurer' Dies on Mt. Everest

கூகுளின் தானியங்கி கார், பலூன் மூலம் அதிவேக இண்டர்நெட் வழங்கும் சேவை உள்ளிட்ட பல முக்கிய சேவைகளுக்கு இவர் ஆலோசனைகள் வழங்கியுள்ளார். மலையேற்ற வீரரான டேன் தற்போது கூகுளின் பிரசித்தி பெற்ற கூகுள் மேப்ஸ் சேவைக்காக, 'ஸ்ட்ரீட் வியூ ப்ராஜெக்ட்' என்ற திட்டப்பணிகளுக்காக எவரெஸ்ட் சென்றிருந்தார்.

எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் உள்ள முகாமில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் எவரெஸ்ட் மலையிலும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக டேன் பலியானார்.

இது குறித்து, கூகுள் தனது இணையதளத்தில் "எங்களில் ஒருவரை இந்த கோரமான நிலநடுக்கத்திற்கு பலி கொடுத்து விட்டோம். டேன் நீண்ட காலமாக கூகுளின் அந்தரங்க அமைப்பான 'மவுன்டெயின் வியூ' வில் உறுப்பினராக இருந்தார். அவருடன் முகாமில் தங்கியிருந்த 3 பேரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.

English summary
On Saturday, Dan Fredinburg was at a base camp on Mount Everest when a powerful earthquake in Nepal set off an avalanche. Fredinburg was killed, Google said in a statement posted on its website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X