For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூகுள் டூடுள்.. இன்னும் நல்லா ஹைட்டா போங்கப்பா.. பாராசூட்டில் இருந்து குதிக்கணும்!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: உலகில் முதல் முதலாக பாராசூட்டில் இருந்து மனிதன் குதித்தின் 216வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கூகுள் ஒரு டூடுளை வெளியிட்டுள்ளது.

பிரான்சை சேர்ந்த ஆன்ட்ரே-ஜாக்ஸ் கார்னெரின் என்பவர் 1797ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி சில்க் பாராசூட் மூலம் 3,000 அடி உயரத்தில் இருந்த பலூனில் இருந்து குதித்தார். அதன் பிறகு அவர் உலகப் பிரபலம் ஆனார்.

அவர் இந்த அதிசயத்தை நிகழ்த்தி இன்றுடன் 216 ஆண்டுகள் ஆகிறது.

நினைவு டூடுள்

நினைவு டூடுள்

ஆன்ட்ரே பாராசூட்டில் இருந்து குதித்ததன் 216ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பான டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலே பறக்கும் பலூன்

மேலே பறக்கும் பலூன்

இன்றைய டூடுளில் பாராசூட்டுடன் கூடிய பலூன் மேலே பறந்து செல்கிறது. ஒரு அளவுக்கு சென்ற பிறகு அங்கிருந்து பாராசூட் மூலம் அதில் உள்ள மனிதர் கீழே குதிக்கிறார்.

திசை

திசை

டூடுளில் இருக்கும் இரண்டு பட்டன்கள் மூலம் பாராசூட்டை இடது அல்லது வலது பக்கமாக நீங்கள் திசை திருப்பலாம். அல்லது உங்கள் மவுஸ் மூலம் பாராசூட்டின் திசையை நிர்ணயிக்கலாம்.

குதித்துவிட்டேன்

குதித்துவிட்டேன்

மேகங்கள், பறவைகளைத் தாண்டி பாராசூட் தரையிறங்குகிறது. அதில் உள்ள மனிதர் தனது தொப்பியை கழற்றி ஆட்டுகிறார்.

English summary
Google celebrates the 216th anniversary of the world's first parachute jump by displaying a special doodle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X