For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்டுக்கு ரூ 1.40 கோடி ஊதியம் தர முன் வந்த கூகுள்!

By Mathi
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பிர்லா தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவன மாணவர்களுக்கு (BITS) ஆண்டுக்கு ரூ1.40 கோடி ஊதியம் தர கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது.

ராஜஸ்தானின் பிலானி பி.ஐ.டி.எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கடந்த ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனமானது ஆண்டுக்கு ரூ 1.44 கோடி ஊதியம் அளித்து பணியில் அமர்த்தியது.

போட்டா போட்டி

போட்டா போட்டி

தற்போதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக வலைதளங்கள், இ காமர்ஸ் நிறுவனங்கள் பி.ஐ.டி.எஸ். மாணவகளுக்காக கேம்பஸ் இண்டர்வியூ நடத்துகின்றன.

5-25% உயர்வு

5-25% உயர்வு

கடந்த ஆண்டு வழங்க முன்வந்த ஊதியத்தை விட 5 முதல் 25% வரை கூடுதலாக வழங்க இந்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

ரூ1.40 கோடி

ரூ1.40 கோடி

கூகுள் நிறுவனமானது ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ1.40 கோடி தர முன்வந்துள்ளது.

சாதனை முறியடிக்கப்படும்?

சாதனை முறியடிக்கப்படும்?

அதே நேரத்தில் பி.ஐ.டி.எஸ் பேராசிரியர்களோ, கடந்த ஆண்டு ரூ1.44 கோடி ஊதியம் பெற்றதுதான் சாதனையாக இருந்தது. நடப்பாண்டில் அது முறியடிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

2300 பேர்...

2300 பேர்...

இந்த ஆண்டு மொத்தம் 2,300 பி.ஐ.டி.எஸ் மாணவர்கள் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களில் 53 பேருக்கு கடந்த 2 நாட்களில் பணிவாய்ப்பு கிடைத்துள்ளது.

100% வேலை

100% வேலை

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அனைத்து மாணவர்களுக்குமே நல்ல ஊதியத்துடனான வேலை உறுதியாக கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருக்கின்றனர் பி.ஐ.டி.எஸ்.பேராசிரியர்கள்.

English summary
Technology and e-commerce players have taken the lead over companies in core industries during the campus placements at the Birla Institute of Technology and Science (BITS)-Pilani. And Google has offered an annual package of Rs 1.40 crore to students selected this year, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X