For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: மோடி அறிவிப்பு

ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட, 39 இந்தியர்களின் உடல்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களுடைய குடும்பத்தாருக்கு, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார

Google Oneindia Tamil News

டெல்லி: ஈராக்கில், 2014ல் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட, 39 இந்தியர்களின் குடும்பத்துக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் ஈராக் இருந்தபோது, அங்கு வேலை பார்த்து வந்த, 40 இந்திய தொழிலாளர்களை அவர்கள் கடத்திச் சென்றனர். அதில் ஒருவர் மட்டும் உயிர் தப்பி நாடு திரும்பினார்.

Government announces Rs.10 lakh for 39 workers killed in Iraq

பயங்கரவாதிகள் பிடியில் இருந்த, 39 இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், அந்த 39 பேரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும், அவர்களுடைய உடல்கள் மோசூல் நகரில் தோண்டி எடுக்கப்பட்டதாகவும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதில், 38 பேரின் அடையாளம் காணப்பட்டு, நேற்று விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருவரது உடல் மட்டும் அடையாளம் காணப்படவில்லை.

இந்த நிலையில், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட, இந்திய தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

English summary
Prime minister Modi announced Rs.10 lakh ex-gratia for the family of 39 indian workers who kllled in Iraq by ISIS
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X