For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபரூக் அப்துல்லா எங்கே? வைகோ வழக்கு.. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கொடுத்த ஷாக் பதில்

Google Oneindia Tamil News

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத்தரக்கோரி வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு வரும 30ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டதில் இருந்து அந்ந மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை அவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Government Detains Farooq Abdullah Under Draconian PSA : reply on SC

இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில் , சென்னையில் 15ஆம் தேதி நடைபெறும் (நடந்துவிட்டது) அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும், அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்ல. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது

டீ கொண்டு வந்து கொடுத்த எம்.பி...! திமுக முப்பெரும் விழாவில் ருசிகர நிகழ்வுடீ கொண்டு வந்து கொடுத்த எம்.பி...! திமுக முப்பெரும் விழாவில் ருசிகர நிகழ்வு

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது பற்றி வரும் 30ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்குக்கு பதில் அளித்த ஜம்மு காஷ்மீர் அரசு, ஃபரூக் அப்துல்லா மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த பதிலை கேட்டு சமூக வலைதளங்களில் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை இரண்டு ஆண்டுகள் வரை தடுப்பு காவலில் வைக்க முடியும் என கூறப்படுகிறது.

English summary
Government Detains Farooq Abdullah Under Draconian PSA : Jammu kashmir govt reply on SC over vaiko case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X