For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அலுவல் நேரத்தில் மட்டம் போடும் அரசு ஊழியர்கள்... செக் வைக்க வருகிறது ஜிபிஎஸ் கண்காணிப்பு முறை!

அலுவல் நேரத்தில் சைட் விசிட், ஆலோசனைக் கூட்டம் என்று அலுவலக பணிகளை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களை ஜிபிஎஸ் கருவி கொண்டு கண்காணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : அலுவல் நேரத்தில் சைட் விசிட், ஆலோசனைக் கூட்டம் என்று அலுவலக பணிகளை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களை ஜிபிஎஸ் கருவி கொண்டு கண்காணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயோமெட்ரிக் வருகை பதிவேட்டுடன் ஜிபிஎஸ் முறையும் இணைக்கப்படுவதால் அரசு அதிகாரிகள் பணியில் இருக்கிறார்களா இல்லையா என்பதை துள்ளியமாக கண்டறியும் வகையில் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

2014ல் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றது முதல் அரசு ஊழியர்களின் வருகைப் பதிவை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் வசதியானது தேசிய தகவல் மையத்தால் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதில் அடுத்தகட்டமாக ஜிபிஎஸ் கருவிகளை இணைக்கும் வசதியும் கொண்டு வரப்பட உள்ளத.

சைட் விசிட், ஆலோசனைக் கூட்டம் என்று கூறிவிட்டு வெளியே செல்லும் அரசு அதிகாரிகள் உண்மையிலேயே பணியிடத்தில் தான் இருக்கிறார்களா என்பதை துள்ளியமாக கண்டறிவதற்காக இந்த விசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இது நிறுவப்பட உள்ளது.

அரசு அதிகாரிகளை கண்காணிக்க

அரசு அதிகாரிகளை கண்காணிக்க

அதிகாரிகள் பணி நேரத்தில் உண்மையில் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் விதமாக இந்த நவீன வசதி கொண்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட உள்ளது. "களப்பணிக்கு செல்லும் அதிகாரிகளுக்க மொபைல் போன், டேப்லட் அல்லது போன்கள் மூலம் தங்களது வருகைப் பதிவை ஏற்படுத்தும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரிகளின் பொறுப்பு மற்றும் பதவிக்கு ஏற்ப யாருக்கெல்லாம் இந்த கருவி பொருத்திய எலக்ட்ரானிக் வசதிகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தும் என்றும் இதற்கான தொடக்கப் பணிகளை நடைபெற்று வருவதாகவும் இந்த திட்டத்திற்காக பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளியூர் செல்லும் போது

வெளியூர் செல்லும் போது

அரசு அதிகாரிகள் வெளியூருக்கு சைட் விசிட்டிற்காகவோ அல்லது ஆலோசனைக் கூட்டங்களுக்காகவோ செல்லும் போது நாள் முழுவதும் வேலைக்கு மட்டம் போடுவது அல்லது தாமதமாக பணிக்கு வருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் பலர் கள ஆய்விலும் ஆலோசனைக் கூட்டத்திலும் அதிக நேரம் செலவிடுவதாகவும் புகார் வருகின்றன.

யார் சோம்பேறித் தனமாக இருக்கிறார்கள்?

யார் சோம்பேறித் தனமாக இருக்கிறார்கள்?

எனவே யார் பணியில் இருக்கிறார்கள், யார் பணி நேரத்தில் தனிப்பட்ட அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கிறது. ஆனால் இந்த ஜிபிஎஸ் கருவி மூலம் உயர் பதவியில் சோம்பேறித் தனமாக செயல்படும் அதிகாரிகள் யார் என்பதை கண்டுபிடிக்கலாம் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ரயில்வே துறையில் சோதனை

ரயில்வே துறையில் சோதனை

இதே போன்று எப்போதும் பிரயாணத்திலேயே இருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் இது தேவைப்படுவதாக ரயில்வே அமைச்சகம் கருதுகிறது. இதனால் பரிச்சாத்த முறையில் ஜிபிஎஸ் கருவி வருகைப் பதிவேடு சோதனையை ரயில்வே துறை முயற்வித்து வருகிறது. தற்போது ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் நுழைவு வாசலிலேயே பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டு விரல் ரேகை பதிவு மூலம் வருகைப் பதிவு செய்யப்படுகிறது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டும் வரிசையில் நிற்காமல் தங்களது பணியிடத்தில் உள்ள கருவியின் மூலம் வருகையை பதிவு செய்து வருகின்றனர்.

English summary
Truant bureaucrats across ministries will soon be tracked by their exact location while they punch in for work, project to link biometric systems with GPS is underway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X