For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்.. ஆளுநர் வோரா அழைப்பு

ஜம்மு காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் | தேசிய பாதுகாப்பு படை குவிப்பு!- வீடியோ

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆளுநர் வோரா அழைப்பு விடுத்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரில் இந்த வார தொடக்கத்தில் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. அங்கு ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி உடைந்தது.

    Governor calls for the all-party meeting in Kashmir

    தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.அங்கு ஆளுநர் வோரா ஆட்சிக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் அம்மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலால் சிரமற்றதன்மை நிலவி வருகிறது.

    அங்கு இதுவரை புதிதாக எந்த கூட்டணியும் அமையவில்லை. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆளுநர் வோரா அழைப்பு விடுத்துள்ளார்.

    காஷ்மீரில் அடுத்து நடக்க போகும் முக்கிய அரசியல் மாற்றங்கள் குறித்து அவர் இதில் பேச இருக்கிறார்.தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள் உட்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அம்மாநில பாதுகாப்பு குறித்தும் இதில் பேசப்படும்.

    English summary
    Governor calls for the all-party meeting in Kashmir after a big blow in the state government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X