For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெஹபூபா முப்தி ராஜினாமா... காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலாகுமா? அடுத்தடுத்த பரபரப்பு

மெஹபூபா முப்தி ராஜினாமா செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறும் என்று தகவல் கூறப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜம்மு-காஷ்மீர்: ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது- வீடியோ

    ஜம்மு: மக்கள் ஜனநாயக கட்சிக்கு பாஜக அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி நடைபெறும் சூழல் நிலவுகிறது.

    கடந்த 2015-ஆம் ஆண்டு பிடிபி கட்சி பாஜகவும் இணைந்து ஆட்சி அமைத்தது. அதில் 28 இடங்களில் வெற்றி பெற்ற பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி பாஜக ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வர் பதவியை வகித்து வந்தார்.

    Kashmir

    இந்நிலையில் பிடிபிக்கு பாஜக ஆதரவு அளித்து வந்ததை திரும்ப பெற்றுக் கொண்டது. இதையடுத்து ஆட்சி கவிழும் என்பதால் மெஹபூபா முப்தியே ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து அங்கு யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு ஆளுநர் வோரா கோரிக்கை விடுத்துள்ளார்.

    உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வரும். எனவே இது குறித்த அறிவிப்பு இன்று இரவு வரலாம் என தெரிகிறது.

    English summary
    Governor's rule may be implemented in Jammu and Kashmir after resignation of Mehbooba Mufti.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X