For Daily Alerts
ஊடக துறையில் அன்னிய நேரடி முதலீடு: உச்ச வரம்பை 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்
டெல்லி: செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்களில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதம் அளவுக்கு அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மத்தியில், மோடி அரசு வந்த பிறகு அன்னிய நேரடி முதலீடுகளுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீட்டின் மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைவிட 29 விழுக்காடு அதிகம்.

இந்த சூழ்நிலையில், செய்தித்தாள் மற்றும் வார இதழ் மற்றும் செய்தி, நடப்பு விவகாரங்கள் சார்ந்த துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு உள்ள கட்டுப்பாட்டை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி ஏஜென்சி தெரிவிக்கிறது.
தற்போது 26 சதவீதமாக உள்ள அன்னிய நேரடி முதலீட்டு கட்டுப்பாட்டை, 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.