For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய பி.எட்.கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது - பிரகாஷ் ஜவடேகர் அதிரடி அறிவிப்பு

புதிய பி.எட். கல்லுாரிகளுக்க இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படமாட்டாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: புதிய பி.எட். கல்லூரிகள் திறக்க இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பி.எட். கல்லூரிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று பணம் கொடுத்தால், நாளை பட்டம் கொடுத்து விடுகிறார்கள்.

 Govt not to allow any new BEd college this year

ஆசிரியர் பயிற்சியின் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டி இருப்பதால், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு புதிய பி.எட். கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் ஏற்கனவே செயல்பட்டு வரும் பி.எட். கல்லூரிகள், தர ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். கல்லூரிகளின் தரம் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரம் கல்லுாரிகள் மட்டுமே அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அறிக்கை அளிக்காத 4 ஆயிரம் கல்லுாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

English summary
Concerned over the quality of the teacher training institutions, the Centre has decided that no new BEd college will be allowed in the country this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X