For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ500, ரூ1000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய டிச. 30க்கு மேல் கால நீட்டிப்பு இல்லை!

செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கால நீட்டிப்பு இல்லை என அறிவித்துள்ளது மத்திய அரசு.

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ500, ரூ1,000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ந் தேதிக்கு மேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

Govt not considering extend deadline for depoist

வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற டிசம்பர் 30-ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கால அவகாசத்தை நீட்டிக்கப் போவதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் டிசம்பர் 30-ந் தேதி பின்னர் மார்ச் 31-ந் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றலாம் என்றும் ஒருநபர் நாளொன்றுக்கு ரூ2,000 மட்டுமே பழைய நோட்டுகளை மாற்ற முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

English summary
The Centrer Govt said that not considering extending deadline of Dec 30 for deposit of invalid notes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X