For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.பி.க்களின் சம்பளம் அப்படியே 'டபுள்' ஆகிறது?: ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு

Google Oneindia Tamil News

டெல்லி: எம்.பி.க்களின் சம்பள உயர்வு குறித்து தீர்மானிக்க 3 பேர் கொண்ட சம்பளக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது இந்திய எம்.பி.க்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது தவிர நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களின் போது அவர்களது வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் நாளொன்றிற்கு ரூ. 2 ஆயிரம் தரப்படுகிறது.

இவை மட்டுமின்றி தொகுதி நிதியாகவும் மாதம் ரூ. 45 ஆயிரம் தரப்படுகிறது. இதில், ரூ. 15 ஆயிரம் ஸ்டேஷனரி பொருட்கள் வாங்குவதற்கும், மீதமுள்ள ரூ. 30 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஆகும்.

Govt Proposes Panel To Decide MPs’ Pay And Perks

இவை தவிர, எம்.பிக்களுக்கு அரசு செலவில் தங்குவதற்கு இடம், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து செலவுகள், தொலைபேசி வசதிகள் உள்ளிட்டவையும் செய்து கொடுக்கப்படுகின்றது. சொந்தமாக வாகனம் வாங்க ரூ. 4 லட்சம் வரை கடன் வசதியும் செய்து தரப்படுகிறது.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இம்மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அரசு தலைமை கொறடா மாநாடு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டசபைகளின் அனைத்துக் கட்சி கொறாடாக்களும் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் எம்.பி.களின் சம்பளம், தினசரி படி, ஓய்வதியம் குறித்து பரீசிலிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, எம்.பிக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை இரண்டு மடங்கு அதிகரிக்கவும், எம்.பிக்களுக்கான சம்பள நிர்ணயத்தை குறிப்பிட்ட காலக்கெடுவில் திருத்தியமைக்கவும் நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதையடுத்து எம்.பி.க்களின் சம்பள உயர்வு குறித்து தீர்மானிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடைசியாக 2010ம் ஆண்டு எம்.பிக்களின் சம்பளம் திருத்தியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

37 வளரும் நாடுகளின் எம்.பிக்களின் சம்பளத்தை ஆய்வு செய்தால் இஸ்ரேலில்தான் அதிக அளவில் சம்பளம் தருகிறார்கள். அதாவது அங்கு மாதச் சம்பளமாக ரூ. 6.16 லட்சம் பெறுகிறார்கள் எம்.பிக்கள்.

குறைந்த அளவிலான சம்பளத்தைப் பெறுவது துனிஷீயாவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் மாதச் சம்பளம் ரூ. 7952 மட்டுமே ஆகும்.

துனிஷியா, வெனிசூலா, இலங்கை, நேபாளம், ஹைதி, பனாமா ஆகிய நாட்டு எம்.பிக்கள் இந்திய எம்.பிக்களை விட குறைந்த சம்பளத்தைப் பெறுகிறார்களாம்.

English summary
Amid demands that MPs should not be allowed to decide their salaries, The government has proposed to set up a three-member panel to recommend pay and perks of lawmakers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X