For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுற்றுசூழல் மாறுபாட்டை திறமையாக கையாளும் மோடி அரசு.. பாரிஸ் ஒப்பந்தம் மூலம் சாதனை!

சுற்றுசூழல் மாறுபாடு கடந்த சில நாட்களாக இந்தியா முக்கியமான நிலையான இடத்தில் இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: சுற்றுசூழல் மாறுபாடு கடந்த சில நாட்களாக இந்தியா முக்கியமான நிலையான இடத்தில் இருக்கிறது. முக்கியமாக சுற்றுசூழலுக்கான பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, சோலார் மின்சாரம் குறித்த திட்டங்களை அறிமுகம் செய்வது என்று மோடி தலைமையிலான அரசு முக்கியமான பணிகளை செய்து வருகிறது.

தொழிற்கூடங்கள் வரும் முன் இருந்த 1.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும் வகையில் 2015ம் ஆண்டு உலக நாடுகள் பல பாரிஸ் சுற்றுசூழல் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. இதன்படி முக்கியமாக கார்பன் டை ஆக்சைட் வெளிப்பாட்டை கட்டுப்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

Govts assertive stance on environment matters draws global appreciation

இந்தியாதான் உலகில் அதிக கார்பன் டை ஆக்சைட் வெளியிடும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியா 6 சதவிகித கார்பன் டை ஆக்சைட் வெளியிடுகிறது. சீனா இதில் முதல் இடத்தில் உள்ளது. சீனா 28 சதவிகித கார்பன் டை ஆக்சைட் வெளியிடுகிறது. அமெரிக்கா 16 சதவிகிதமும், ஐரோப்பா 10 சதவிகிதமும் கார்பன் டை ஆக்சைட் வெளியிடுகிறது.

சுற்றுசூழல் மாற்றம் காரணமாக நம் நாட்டில் இருக்கும் தாவரங்கள், விலங்குகள், காடுகள், காடு வாழ் உயிரினங்கள் என அனைத்தும் எந்த அளவிற்கு பாதிப்புகளை சந்திக்கிறது என்பதை கருத்தில் கொண்டு தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசின் சுற்றுசூழல் துறை பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் முக்கியமாக இந்தியா முழுக்க காடுகளை அதிகமாக்க வேண்டும். இதன் காரணமாக சுற்றுசூழல் மாறுபாட்டை குறைக்க முடியும். இதற்காகவே 10 லட்சம் கோடி ரூபாயும், 2000 ஒப்பந்தங்களும், 10 லட்சத்திற்கும் அதிகமான புதிய பணியாளர்களும் 190 முதல் 600 நாட்கள் வரை பணி செய்து வருகிறார்கள்.

உலகிலேயே காடுகளின் சதவிகிதம் அதிகமாகும் நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடு என்பது குறிப்பிடத்தக்கது. காடுகளின் சதவிகித கணக்குப்படி இந்தியாவில் 2015 கணக்கெடுப்பின்படி 794,245 சதுர கிலோ மீட்டர் காடுகள் உள்ளது. அதாவது இந்தியாவில் 24.16 சதவிகித நிலப்பரப்பு காடுகளாகும்.

அதன்படி 2013ஐ விட 3775 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு காடுகள் அதிகமாகி உள்ளது. இப்போதும் கூட இந்தியாவில் 30 சதவிகித எரிபொருள் தேவையை காடுகள்தான் பூர்த்தி செய்கிறது. முதல்நிலை எரிபொருள் தேவையை 40 சதவிகிதம் காடுகள்தான் பூர்த்தி செய்கிறது.

இந்த வளங்களை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மிகவும் திறமையாக கையாண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய சுற்றுசூழல் அமைச்சகர் பிரகாஷ் ஜவடேக்கர் கடந்த 2016ல் பாரிஸ் ஒப்பந்தத்தில் ஐநா மாநாட்டில் கையெழுத்திட்டார். இதன் மூலம் சுற்றுசூழலை பாதுகாக்கும் நாடுகளில் இந்தியா மிக முக்கியமான இடத்தை அடைந்துள்ளது. பலர் வளர்ந்த நாடுகள் செய்யாத சாதனையை இதன் மூலம் இந்தியா செய்துள்ளது.

English summary
India has taken an assertive global position on climate change in recent years. India signing the historic Paris climate agreement and inititive to head the International Solar Alliance garnered international appreciation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X