For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை, மதுரை, கோவை .... 12 தமிழக நகரங்கள் உட்பட 98 நகரங்கள் "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்துக்கு தேர்வு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 12 நகரங்களையும் சேர்த்து நாடு முழுவதும் 98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் 98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் 24 தலைநகரங்கள், 24 வர்த்தகம் மற்றும் தொழில் நகரங்கள்; சுற்றுலா மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 18 நகரங்கள்... 5 துறைமுக நகரங்கள்; கல்வி மற்றும் சுற்றுலாத் துறை சார் நகரங்கள் 3 ஆகும்.

நாட்டில் மிக அதிகமாக உத்தரப்பிரதேசத்தில் 13, தமிழகத்தில் 12, மகாராஷ்டிராவில் 10, மத்திய பிரதேசத்தில் 7, கர்நாடகா மற்றும் குஜராத்தில் தலா 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் சிட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட 12 தமிழக நகரங்கள் விவரம்:

மதுரை, கோவை, சென்னை, வேலூர், சேலம், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு

இந்தப் பட்டியலில் இடாநகர், பாட்னா, சிம்லா, பெங்களூர், டாமன், திருவனந்தபுரம், புதுச்சேரி, காங்டாக், கொல்கத்தா சேர்க்கப்படவில்லை.

Govt unveils smart cities list

இந்த 98 நகரத்துக்கும் தொடக்கமாக தலா ரூ2 கோடி ஒதுக்கப்படும். அதன் பின்னர் 2வது கட்டமாக அடுத்த சில மாதங்களில் ஒவ்வொரு நகரத்துக்கும் 5 ஆண்டுகளுக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

English summary
The Bharatiya Janata Party-led NDA government today declared nominations for its ambitious Smart Cities project. A list of 98 cities, which include 13 cities from Uttar Pradesh and 12 from Tamil Nadu were announced by Urban Development ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X