For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.15 ஆயிரத்திற்கு குறைவாக சம்பளம் பெறுவோர் பி.எப். தொகையை 3 வருடங்களுக்கு அரசே செலுத்தும்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியை (பி.எப்) முதல் 3 வருடங்களுக்கு அரசே செலுத்தும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அவர்கள் பணிக்கு சேர்ந்த முதல் 3 வருடங்களுக்கு அரசே பி.எப் தொகை ப்ரீமியத்தை செலுத்தும்.

Govt will pay EPF contribution of 8.33% for all new employees

அதாவது, அவர்களுக்காக நிறுவனங்கள் வழங்க வேண்டிய 8.33 சதவீத பி.எப். பங்குத்தொகையை அரசே செலுத்திவிடும். இதனால், தொழில் நிறுவனங்கள், வேலையற்ற இளைஞர்களை வேலைக்கு எடுப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்புகிறோம்.

இந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.

English summary
Govt will pay EPF contribution of 8.33% for all new employees Whose basic salary is less than Rs 15K per month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X