For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராமப் பஞ்சாயத்தின் குரூர விர்ஜினிட்டி டெஸ்ட்... 48 மணி நேரத்தில் திருமணத்தை ரத்து செய்தனர்!

Google Oneindia Tamil News

மும்பை: மகராஷ்டிர மாநிலத்தில் திருமணம் முடிந்த தம்பதிக்கு குரூரமான முறையில் கன்னித்தன்மை சோதனை நடத்தி, மணமகள் ஏற்கனவே கன்னி கழிந்தவர் என்று கூறி, திருமணம் நடந்த 48 மணி நேரத்திற்குள்ளாகவே அதை ரத்து செய்து அராஜகமாக நடந்து கொண்டுள்ளது ஒரு கிராமப் பஞ்சாயத்து.

நாசிக்கில் கடந்த மே.22-ந் தேதி திருமணம் ஒன்று நடந்தது. முதலிரவுக்கு முன்பாக கிராமப் பஞ்சாயத்துக் குழு மணமகனிடம் வெள்ளை நிற படுக்கை விரிப்பை கொடுத்துள்ளனர். முதலிரவு முடிந்ததும் அதை மீண்டும் தங்களிடம் கொண்டுவரும்படி பஞ்சாயத்தார் கூறியுள்ளனர்.

Groom terminates marriage after wife fails 'virginity test’

அதன்படி, மணமகன் முதலிரவு முடிந்த பின்னர் தனது வெள்ளை நிற படுக்கை விரிப்பை கொண்டுவந்து தலைவர்களிடம் காட்டி உள்ளார். அதைப் பார்த்த அந்த கேடு கெட்ட பஞ்சாயத்துக் குழுவினர், அதில் ரத்தக் கறை இல்லையே என்று கூறி, மணமகள் கன்னித்தன்மையற்றவர் என்று கூறி திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். சமரசக் கூட்டத்திற்கு கோரிக்கை வைத்தனர். அக்கூட்டத்தில் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து மணமகள் வீட்டார் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. மணமகள் போலீஸ் ஆக வேண்டும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால், அவர் சைக்கிள் ஓட்டுதல், நீளம் தாண்டுதல், மற்றும் கடின பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

கன்னித்தன்மை சோதனை என்ற பெயரில் கிராமப் பஞ்சாயத்தால் நடந்து கொண்ட அநாகரீக முறைக்கும், திருமணத்தைப் பிரித்து வைத்த கொடும் செயலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சாதி பஞ்சாயத்து மற்றும் ஊர்பஞ்சாயத்து எந்த வடிவிலும் செய்ல்படக்கூடாது என தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், இது போன்ற குரூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A caste panchayat in Nashik has allowed a newly-wed groom to terminate his marriage in just a span of 48 hours, after he reported that his bride had ‘failed the virginity test’.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X