For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாது.. மும்பை ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Google Oneindia Tamil News

நாக்பூர்: ஆடைக்கு மேலே மார்பகங்களை தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை (sexual assault) கிடையாது. அந்த சட்டப் பிரிவில் வழக்கு வராது என்று மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Recommended Video

    ஆடை மேல் அதை தொட்டால் பாலியல் வன்கொடுமை கிடையாது..வலுக்கும் எதிர்ப்புகள் | Oneindia Tamil

    மகாராஷ்டிராவை சேர்ந்தவர் அந்த 39 வயது நபர். 2016ம் ஆண்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கொய்யாப் பழம் கொடுப்பதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    வீட்டுக்கு போனதும், சிறுமியின் மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தியுள்ளார். பிறகு சிறுமியின் சல்வர் கமீஸ் ஆடையை அகற்ற முயன்றுள்ளார்.

    கொய்யாப்பழம் தருவதாக கூறி அத்துமீறல்

    கொய்யாப்பழம் தருவதாக கூறி அத்துமீறல்

    சரியாக அந்த நேரம் பார்த்து, சிறுமியின் தாய் அங்கு சென்றார். சிறுமி அழுவதை பார்த்து விவரம் கேட்டபோது, இந்த தகவல்களை அந்த சிறுமி கூறியுள்ளார். எனவே, பாலியல் தாக்குதல் நடத்தியதாக கூறி குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது. மார்பகங்களை அழுத்தியதால், பாலியல் தாக்குதல் பிரிவின்கீழ் அந்த நபருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

     போஸ்கோ சட்டம்

    போஸ்கோ சட்டம்

    இந்த வழக்கை நீதிபதி புஷ்பா கனேடிவாலா விசாரித்தார். அரசு தரப்பில் போஸ்கோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாகும். ஆனால் நீதிபதி புஷ்பா கனேடிவாலா இந்த சட்டத்தின்கீழ், குற்றவாளி பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

    ஆடையை அகற்றவில்லை

    ஆடையை அகற்றவில்லை

    சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றிவிட்டு, மார்பகங்களை குற்றவாளி அழுத்தினாரா, ஆடைக்குள் கை விட்டு மார்பகங்களை அழுத்தினாரா என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆடைக்கு மேலே கையை வைத்து மார்பகங்களை அழுத்துவது பாலியல் தாக்குதல் என்ற பிரிவின்கீழ் வராது. இது தவறான செயல்தான். ஆனால், சட்டப்படி, இதுபோன்ற செயல்கள், பெண்களின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்ற பிரிவின்கீழ்தான் வரும். தோல் மீது தோல் பட்டு செய்யப்படும் அத்துமீறல்தான் பாலியல் தாக்குதல் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில், குற்றவாளி கைகள் நேரடியாக சிறுமியின் மார்பகத்தில் படவில்லை என்பதால், பாலியல் தாக்குதல் எனக் கூற முடியாது. இவ்வாறு நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    பெண்கள் மாண்பு

    பெண்கள் மாண்பு

    போஸ்கோ சட்டத்தின் 8 வது பிரிவின் கீழ் குற்றவாளி விடுவிக்கப்பட்டார். அதேநேரம் ஐபிசி 354 இன் கீழ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஒரு வருடம் கடுங்காவல் மற்றும் ரூ .500 / - அபராதம் செலுத்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில், செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் போக்ஸோ சட்டத்தின் கீழும், ஐபிசி பிரிவு 354 ன் கீழும் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இப்போது ஹைகோர்ட் அதை ஒரு வருடமாக குறைத்துள்ளது.

    சர்ச்சையாகும் தீர்ப்பு

    சர்ச்சையாகும் தீர்ப்பு

    பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராக தண்டனைகளை கடுமைப்படுத்த வேண்டும் என்பது சமீப காலமாக பரவலாக எழுந்து வரும் கோரிக்கை. ஆனால், இதுபோன்ற ஒரு வழக்கில், ஏற்கனவே விதிக்கப்பட்ட 3 வருட சிறை தண்டனையை 1 வருடங்களாக குறைத்துள்ளது மும்பை ஹைகோர்ட் கிளை. மேலும், ஆடையோடு சேர்த்து மார்பகங்களை அழுத்தும் குற்றங்கள், பாலியல் தாக்குதல் பிரிவின்கீழ் வராது என்று கூறி, தீர்ப்பு வழங்கியிருப்பதால், பிற வழக்குகளில் இந்த தீர்ப்பு, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படும் அபாயம் உள்ளது. இது பெண்களை போகப் பொருளாக பார்ப்போருக்கு வசதியாக போய்விடும் வாய்ப்பை ஏற்படுத்தும். பஸ், ரயில் போன்ற பொது இடங்களில் கூட பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும். என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை குற்றவாளிகளுக்கு ஏற்படுத்தும். எனவே மகாராஷ்டிரா அரசு, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு போஸ்கோ சட்டத்தின்கீழ், அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று பொது மக்களிடையே கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    English summary
    The Mumbai High Court, modifying a sessions court order that held a man guilty of a minor's sexual assault, ruled that groping a child without "skin-to-skin contact with sexual intent" does not amount to the offence under the Prevention of Children from Sexual Offences (POCSO) Act.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X