For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்காமல் நினைவில் நிற்கும் 90' களின் நினைவலைகள்...

Google Oneindia Tamil News

டெல்லி: நீங்கள் 90களில் பிறந்தவர்களானால் அக்காலகட்டத்தில் பிரபலமான நினைவுகளான புத்தக கிரிக்கெட், பிளேம் விளையாட்டை பற்றி அறிந்திருப்பீர்கள். இல்லையெனில் "வோ டின் - ட்ரிபூயுட் டு நைன்டீஸ்" என்ற வீடியோவைப் பாருங்கள்.

அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள சில இனிப்பான நினைவுகள் இங்கே உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.

எல்லாமே இயந்திரமயமாகிய இக்காலத்தில் மறக்க முடியாத சுகமான நினைவுகளில் நீங்களும் எங்களுடன் சில நிமிடங்கள் நனையுங்களேன்.

புத்தக கிரிக்கெட்:

புத்தக கிரிக்கெட்:

குறிப்பாக கடைசி பெஞ்ச் மாணவர்களால் இந்த விளையாட்டு, வகுப்பின் சலிப்பான தருணங்களில் விளையாடப்பட்டிருக்கும். கைபோன போக்கில் பாட புத்தகத்தில் பக்கங்களை திருப்பும்போது அந்த பக்க எண் தான் உங்களுடைய ரன்.

கேஸட்

கேஸட்

பாட்டு கேட்கும் கேஸட்டுகள் அதிகமாக காணப்பட்ட காலம் அது. 90களில் பென்சிலால் ஒலிநாடாவினை சுருட்டி விளையாடாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

பிளேம் விளையாட்டு

பிளேம் விளையாட்டு

ஆங்கிலத்தில் பிளேம் என எழுதி நண்பர்களா, எதிரிகளா,காதலர்களா என கண்டுபிடிக்கும் இந்த விளையாட்டு தற்போதும் பல குறும்புக்கார மாணவர்களால் விளையாடப்பட்டு வருகிறது. இது நூறு சதவிகிதம் உண்மையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

லேண்ட்லைன் தொலைபேசி:

லேண்ட்லைன் தொலைபேசி:

மொத்த குடும்பத்திற்கும் ஒரே தொலை பேசிதான். கைபேசி இல்லாத அக்காலத்தில் குடும்பங்களை இணைக்கும் பாலமாக செயல்பட்டது இது.

ஃபிளாப்பி

ஃபிளாப்பி

சதுரமாக காணப்படும் சேமிப்பு கருவியான ஃபிளாப்பிதான் இன்றைய சிடி,பென் டிரைவ்களின் பெற்றோர் என்று கூறினால் அது மிகையாகாது.

பள்ளி புத்தகங்களுக்கு அட்டை போடுதல்:

பள்ளி புத்தகங்களுக்கு அட்டை போடுதல்:

பள்ளி புத்தகங்களுக்கு அட்டை போடும் பழக்கம் மிக இனிமையான மறக்க முடியாத அனுபவமாகும்.

கோடாக் பிலிம் ரோல்ஸ்:

கோடாக் பிலிம் ரோல்ஸ்:

டிஜிட்டல் கேமாராக்கள் கண்டுபிடிக்காத காலக்கட்டத்தில் புகைப்படம் எடுக்க,நினைவுகளை பதிவு செய்ய இவைதான் பயன்பட்டன.

பாம்பும்,ஏணியும்:

பாம்பும்,ஏணியும்:

பாம்பும்,ஏணியும் உள்ள பரமபத விளையாட்டு எல்லா வயதினருக்கும் பிடித்தமான போட்டி இல்லாத விளையாட்டாகும்.

நினைவுகள் மறப்பதில்லை:

நினைவுகள் மறப்பதில்லை:

கடந்து போன நினைவுகளை திரும்பி பார்ப்பதும் சில நேரங்களில் சுகம்தான் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான் இல்லையா.?....

English summary
If you grew up in the '90s, you'll know exactly what we are talking about. If not, watch 'Woh Din - A tribute to the 90s' and see what life was back then.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X