For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

88 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு.. விலை குறையும் பொருட்கள் இவைதான்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    வரி விலக்கு பெரும் நாப்கின்...88 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு- வீடியோ

    டெல்லி: மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற 28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 88 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.

    சானிட்டரி நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. வரி விலக்கு பெறும் பொருட்கள் மற்றும் வரி குறைப்புக்குள்ளான பொருட்கள் குறித்த ஒரு பட்டியலை இங்கே பாருங்கள்.

    GST Council Meet: Here is what got cheaper and other major announcements

    ஜிஎஸ்டி வரி விலக்கு பெறும் பொருட்கள்:

    • சானிட்டரி நாப்கின், தங்கம் வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் சேர்க்கப்படாத ராக்கி கயிறு.
    • மார்பிள், துடைப்பத்திற்கு பயன்படுத்தப்படும் அடிப்படை பொருட்கள்
    • செறிவூட்டிய பால்
    • சாப்பாடு தட்டு உருவாக்க பயன்படும் இலை
    • தேங்காய் நார் உரம்

    12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறையும் பொருட்கள்:

    • கைத்தறி துணி
    • போஸ்பிக் ஆசிட் பூச்சிக்கொல்லி மருந்து

    28 சதவீத உச்சபட்ச வரி விதிப்பில் இருந்து 18 சதவீதமாக குறைந்த பொருட்கள்:

    • வாஷிங் மெஷின்
    • பிரிட்ஜ், ப்ஃரீசர்
    • 68 செ.மீ வரையிலான டிவிகள்
    • வீடியோ கேம்கள்
    • வேக்குவம் கிளீனர்கள்
    • ட்ரெய்லர்கள் மற்றும் செமி-ட்ரெய்லர்கள்
    • மிக்ஸி
    • ஷேவிங் மெஷின், முடி காய வைக்கும் ட்ரையர்கள்
    • வாட்டர் கூலர்
    • ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர்கள்
    • லிதியம் இயோன் பேட்டரிகள்
    • எலக்ட்ரிக் இரும்பு
    • பெயிண்ட்

    பிற மாற்றங்கள்:

    • பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்பதற்காக ஆயில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் எத்தனால் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
    • இறக்குமதி செய்யப்படும் யூரியா மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
    • இ-புத்தகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கபபட்டுள்ளது
    • ஜூலை 27ம் தேதி முதல் இந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வருவதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    English summary
    The 28th GST Council meeting chaired by interim Finance Minister Piyush Goyal on Saturday cut tax rates on 88 items, including footwear, refrigerator, washing machine and small screen TV. The revised tax rates will come into effect from July 27.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X