For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிகப் பெரிய விஷயமான ஜிஎஸ்டியை மோசமான பாதையில் கொண்டு சென்ற மத்திய அரசு- காங் #FailedGST

மிகப் பெரிய விஷயமான ஜிஎஸ்டியை தவறான பாதையில் கொண்டு சென்றது மத்திய அரசு என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: மிகப் பெரிய விஷயமான ஜிஎஸ்டியை தவறான பாதைக்கு மத்திய அரசு கொண்டு சென்றது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிகள் எனப்படுவது ஜிஎஸ்டி ஆகும். நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்படுவதாகும். இந்த வரிகள் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இதில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸின் கோரிக்கையை மத்திய அரசு காது கொடுத்து கேட்கவே இல்லை. இந்நிலையில் இந்த வரிகள் அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

 ஜிஎஸ்டி அமல்

ஜிஎஸ்டி அமல்

இதுகுறித்து காங்கிரஸ் தொடர் டுவீட்களில் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் ஜிஎஸ்டி என்பது பிரதமர் நரேந்திர மோடியின் யூ டர்ன் ஆகும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. எனினும் ஜிஎஸ்டி உறுதியளித்தப்படி முறைப்படுத்தப்படவில்லை.

தோல்விகளில் ஒன்றாகும்

இதனால் பணப்பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மளிகை பொருட்களின் விலை குறைய வில்லை என்று 63 சதவீதம் பேர் கூறுகின்றனர். உணவு விடுதிகளில் உணவுகளின் விலை குறைய வில்லை என 57 சதசவீத மக்கள் தெரிவிக்கின்றனர். ஜிஎஸ்டி என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தோல்விகளில் ஒன்றாகும்.

ஜிஎஸ்டி

மிகவும் சிக்கலான வகையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் பொருளாதாரம் தோல்வியடைந்துவிட்டது. எனினும் மோடி தொடர்ந்து ஜிஎஸ்டி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ப.சிதம்பரம் ஒரு கருத்தரங்கில் பேசுகையில், தேவையில்லாதவற்றை பெரிய அளவிலும் (பணமதிப்பிழப்பு), முக்கியமானவற்றை மோசமான நிலையிலும் (ஜிஎஸ்டி) பாஜக அரசு செய்துள்ளது.

அச்சம்

ஜிஎஸ்டி அரசமைப்பு சட்டதிருத்த மசோதா தொடங்கிய காலம் முதல் ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய அரசு எடுத்து வைத்த அனைத்து நடவடிக்கைகளும் குறைபாடுகள் கொண்டதாகவே இருந்தன. முதன்மை பொருளாதார ஆலோசகரின் அறிவுரைகளை மத்திய அரசு கேட்கவில்லை. இந்த வரியை கண்டு வணிகர்கள், கடைக்காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் அச்சமடைந்தனர் என்று தெரிவித்தார்.

English summary
The Congress criticised the Centre saying the GST has not delivered on the promised formalisation of the economy as yet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X