For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களுக்கு தீபாவளி பரிசு.. 27 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு: அருண் ஜெட்லி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் இன்று காலை முதல் இரவு வரை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டன.

ஒவ்வொரு மாதமும், மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த மாதம் கவுகாத்தியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

GST rate on 27 items reduced

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் குறித்து அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறியது வருமாறு:

  • ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களே ஆவதால் வரி வசூல் குறித்த தெளிவான தகவல்கள் எனக்கு கிடைக்க வில்லை. 2018 ஏப்ரல் முதல் ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களுக்கும் இ வேலட் அறிமுகம் செய்யப்படும்.
  • வணிக சின்னம் இல்லாத ஆயுர் வேத மருந்துகளுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • கைத்தறி நூல்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • எழுது பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • டீசல் இன்ஜின் உதிரிபாகங்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது
  • சரக்குகளை கொண்டு செல்ல ஜனவரி முதல் நாடு முழுக்க இ-வே பில் விரிவு படுத்தப்படும்.
  • ஏற்றுமதியாளர்கள் முன்கூட்டியே செலுத்திய வரி அக்.10-ம் தேதியிலிருந்து திரும்ப வழங்கப்படும்
  • ஈட்டு திட்டத்தின்கீழ் இப்போதுள்ள ரூ.75 லட்சம் உச்சவரம்பு, ரூ.1 கோடியாக உயர்த்தப்படும்.
  • ஒன்றரை கோடிக்கு உள்ளே வணிகம் செய்வோர் 3 மாதங்கள் ஒருமுறை கணக்கு காண்பித்தால் போதும்
  • ஏசி ரெஸ்டாரண்டுகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து கோரிக்கை வந்துள்ளதால், அமைச்சர் குழு ஆய்வு செய்து 2 வாரத்தில் பரிந்துரை செய்யும்.
  • பிராண்டட் அல்லாத ஸ்நாக்ஸ் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
  • மொத்தம் 27 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி இப்போதுள்ளதைவிட குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.
English summary
Compliance burden of medium, small taxpayers being cut, says Arun Jaitley, Reduced GST Rate On Unbranded Snacks To 5% From 12% he added. GST rate on 27 items reduced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X