For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாமுண்டேஸ்வரி தொகுதியில் சித்தராமையாவை தோல்வியின் விளிம்புக்கு துரத்தும் ஜி.டி.தேவகவுடா! யார் இவர்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    சித்தராமையாவை தோல்விக்கு துரத்தும் ஜி.டி.தேவகவுடா! யார் இவர்?

    மைசூர்: சாமுண்டேஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை தோல்விக்கு விரட்டிக் கொண்டிருப்பது அவரின் மிக நெருங்கிய நண்பராக விளங்கிய ஜி.டி.தேவகவுடா.

    விவசாய குடும்பத்தில் பிறந்த ஜி.டி.தேவகவுடா 1978ம் ஆண்டு, அரசியலில் கால் வைத்தார். 1983ம் ஆண்டு முதல் சித்தராமையாவுடன் ஜி.டி.தேவகவுடாவுக்கு நட்பு ஏற்பட்டது.

    இந்த நட்பு சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக நெருக்கமாக தொடர்ந்தது. ஜி.டி.தேவகவுடா முதல் முறையாக வகித்த பதவி ஜில்லா பஞ்சாயத்து தலைவர். இதன்பிறகு ஹுன்சூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    ஜனதா டூ காங்கிரஸ்

    ஜனதா டூ காங்கிரஸ்

    காங்கிரசில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தாலும், 1983ம் ஆண்டு ஜனதா கட்சியில் இணைந்தார். ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர் ஜி.டி.தேவகவுடா இதுகுறித்து கூறுகையில், "2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் என்னை தோற்கடிக்க மைசூர் ராஜ குடும்பத்தை சேர்ந்த உடையாருக்கு சித்தராமையா ஆதரவு அளித்து வேலை பார்த்தார். அவர் நினைத்தது நடந்தது. அப்போது முதல் எங்கள் நட்பு கசந்தது" என்றார்.

    கசந்த நட்பு

    கசந்த நட்பு

    சித்தராமையாவுடனான மோதலுக்கு பிறகு 2007ம் ஆண்டில் ஜி.டி.தேவகவுடா பாஜகவில் இணைந்தார். ஆனால் 2013ம் ஆண்டு, மஜதவில் இணைந்தார் ஜி.டி.தேவகவுடா.

    மஜதவின் முக்கிய தலைவர்

    மஜதவின் முக்கிய தலைவர்

    மைசூர் மாவட்டத்தில் மஜதவின் முக்கியமான தலைவராக மேம்பட்டார் ஜி.டி.தேவகவுடா. "வருணா தொகுதியில் சித்தராமையா வெற்றி பெற்ற பிறகு சாமுண்டேஸ்வரி தொகுதிக்கு 10 வருடங்களுக்கு பிறகு போட்டியிட வந்து சென்டிமென்ட்டாக பேசினால் மக்கள் நம்ப மாட்டார்கள்.

    மக்கள் என் பக்கம்

    மக்கள் என் பக்கம்

    நான் மக்களுக்காக எப்படி உழைப்பேன் என்பது மக்களுக்கே தெரியும். எனவே சித்தராமையாவை பார்த்து எனக்கு பயம் இல்லை. என்னை பார்த்துதான், சித்தராமையாவுக்கு பயம்" என்று தேர்தலுக்கு முன்பாக தெரிவித்தார், ஜி.டி.தேவகவுடா. இன்றைய வாக்கு எண்ணிக்கையின் 4வது சுற்று முடிவில் ஜி.டி.தேவகவுடா 11,624 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.

    English summary
    GT Devegowda the man who leads on one-time friend Siddaramaiah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X