For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏன் வெறித்துப் பார்க்கிறாய் என்றார்.. கொன்று விட்டேன்.. புனே ஐடி பெண்ணைக் கொன்றவர் வாக்குமூலம்

ஏன் இப்படி வெறித்து வெறித்து பார்க்கிறாய் என்று கேட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றேன் என்று புனே இன்போசிஸ் பெண் பொறியாளர் கொலை வழக்கில் கைதான கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புனே: கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரசிலா ராஜூ. 25 வயதான இவர் புனேவின் ஹிஞ்ஜேவாடியில் உள்ள இன்போஸிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
விடுமுறை நாளான ஞாயிறன்று தனது பணியை செய்வதற்காக அலுவலகம் வந்தார் ரசிலா.

ரசிலாவை அவரது மேலாளர் பல முறை தொலைபேசியில் அழைத்தும் பதில் இல்லாததால், பாதுகாவலரை அழைத்து பார்த்து வர கூறினார். இதையடுத்து பாதுகாவலர் சென்று பார்த்தபோது ரசிலா வேலை பார்க்கும் 9வது மாடியில் ஒயரால் கழுத்து நெரிக்க பட்ட நிலையில் மயக்கமாக கிடந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக ரசிலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரசிலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பாதுகாப்புக் காவலர்தான் அந்த பெண்ணை கொலை செய்துள்ளார் என்பது தெரிய வரவே தப்பிச்சென்ற காவலாளியை மும்பையில் கைது செய்தனர்.

விடுமுறை நாளில் பணி

விடுமுறை நாளில் பணி

ஞாயிறன்று மதியம் 2 மணியளவில் அலுவலகத்துக்கு வந்த ரசிலாவின் பணி நேரம் இரவு 11 மணி வரையாகும். இதற்கிடைய, மாலை 5 மணிக்குப் பிறகு அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், இன்போசிஸ் திட்ட மேலாளர், இரவு 8 மணியளவில் அலுவலக பாதுகாவலரை தொடர்பு கொண்டு, அலுவலகத்துக்குள் சென்று ரசிலாவை பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

கழுத்து இறுக்கிய நிலையில்

கழுத்து இறுக்கிய நிலையில்

அவர் உள்ளே சென்று பார்த்த போது, ரசிலா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ரசிலா 5 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. அப்போது அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் பபென் செயில்சியா,மற்றொரு பாதுகாவலர் பணிக்கு வந்ததும், மாலை 6.30 மணியளவில் பணி முடிந்து, வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து கிளம்பியுள்ளார்.

காட்டிக்கொடுத்த சிசிடிவி

காட்டிக்கொடுத்த சிசிடிவி

பபென் செயில்சியா அசாமைச் சேர்ந்தவர். அவர் நேராக தனது இருப்பிடத்துக்குச் சென்று தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு மும்பைக்கு கிளம்பியுள்ளார்.
ரசிலா கொலை செய்யப்பட்டது இரவு 8 மணியளவில்தான் தெரிய வந்தது. அதன்பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தி, அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அலுவலகத்துக்குள் பபென் நுழைந்திருப்பது தெரியவந்தது.

தப்பிய காவலாளி

தப்பிய காவலாளி

உடனே காவலர்கள் அவரது இருப்பிடத்துக்குச் சென்றனர். ஆனால் அதற்குள் பபென் புனேவை விட்டு தப்பிவிட்டார். உடனடியாக காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு, அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை தொடர்ந்து சென்று மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கைது செய்தனர்.

அசாம் காவலாளி

அசாம் காவலாளி

அவசர வேலை காரணமாக விடுமுறை நாளன்று அந்தப் பெண் அங்கு பணி புரிந்து கொண்டிருந்துள்ளார். அந்தப் பகுதிக்கு காவலாளியைத் தவிர வேறு யாரும் செல்ல வாய்ப்பில்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் அசாமைச் சேர்ந்த அந்த காவலாளியை கைது செய்துள்ளோம். அந்த நபரும் கொலை நடந்த அன்று மாலையே தனது சொந்த ஊரான அசாமுக்கு செல்ல முயற்சித்தது எங்களது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

கொலை செய்தது ஏன்?

கொலை செய்தது ஏன்?

ரசிலாவை கொலை செய்தது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் அந்த காவலாளியிடம் விசாரணை நடத்தினர். ஞாயிறன்று ரசிலா மட்டுமே பணியில் இருந்தாள். 9வது மாடியில் ரசிலா இருந்த அறைக்கு காவலாளி சென்றுள்ளான். காவலாளியின் நடவடிக்கை பிடிக்காததால் அவனைப்பற்றி புகாரை பதிவு செய்துள்ளார் ரசிலா.

வாக்குவாதம்

வாக்குவாதம்

இருவருக்கும் இடையை சில நிமிடங்கள் வாக்குவாதம் நடந்துள்ளது. ரசிலாவின் முகத்தில் காவலாறி அடித்துள்ளான். பின்னர் அருகில் இருந்த கேபிள் வயரை எடுத்து இறுக்கி கொலை செய்து விட்டு தப்பியுள்ளான். தப்பி செல்லும் போது ரசிலாவின் அக்சஸ் கார்டையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Rasila Raju OP was found dead in the conference room on the ninth floor of Infosys premises in Hinjewadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X