For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபாஷ்... தாயை பிரிந்த 2 மாத சிங்கக் குட்டி மீட்பு... வனத்துறையின் தீவிர முயற்சிக்கு பலன்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் வனப்பகுதியில், சுற்றித்திரிந்த 2 மாத சிங்கக்குட்டியை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். கிர் விலங்கியல் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 2 மாத சிங்கக்குட்டி ஒன்று, அண்மையில் தாயை விட்டு பிரிந்து காணாமல் போனது.

இதையடுத்து சிங்கக்குட்டியை தீவிரமாக தேடி வந்த வனத்துறையினர், மிகவும் உடல் நலிந்த நிலையில் குட்டியை அடர்ந்த ஜூனாகத் வனப்பகுதியில் கண்டுபிடித்தனர். அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து, வனத்துறை அதிகாரிகள் விலங்குகளுக்கான பராமரிப்பு மையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Gujarat: A 2-month-old ailing lion cub was rescued from Gir National Park, Junagadh

குஜராத்தில் 1,400 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பில் அமைந்துள்ள கிர் காடுகளில் சிங்கங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இங்கு சாலைகள் அமைப்பது, கிராமங்கள் விரிவாக்கம் செய்யப்படுவது மற்றும் சட்டவிரோத சுரங்கங்கள் தோண்டுவது ஆகியவற்றால் அதன் வாழ்விடங்கள் பாதிப்படைந்து உள்ளன.

அதே சமயம், 2015 ம் ஆண்டு இங்கு 600 சிங்கங்கள் இருந்தன. அடுத்த 2 வருடத்தில் 110 சிங்கங்களும், 94 சிங்க குட்டிகளும் இறந்துள்ளன. 75 சிறுத்தை குட்டிகளும் இறந்துள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

சிங்கங்கள் இடையேயான மோதல் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு ஆகியவை சமீபத்திய உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. குறைந்த காலத்தில் சிங்கங்கள் அதிக அளவில் உயிரிழந்து உள்ளது வன துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்கள் இடையே வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Gujarat: A 2-month-old ailing lion cub was rescued from Gir National Park, Junagadh. The cub was taken to an animal care center.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X