For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. அகமதாபாத்தில் மீண்டும் இரவு நேர லாக்டவுன் அமல்!

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் அங்கு இரவு நேர லாக்டவுன் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரை மீண்டும் லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுக்க பல்வேறு நகரங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுவிட்டதோ என்று அச்சம் ஏற்படும் அளவிற்கு புதிய கேஸ்கள் வர தொடங்கி உள்ளது.

Gujarat: Ahmedabad imposed night curfew again after raising of Coronavirus cases

அதேபோல் குஜராத்திலும் சமீப நாட்களில் தினசரி கேஸ்கள் 1000க்கும் அதிகமாக வருகிறது. அதிலும் அகமதாபாத்தில் தினமும் அதிக கேஸ்கள் வருகிறது. இந்த நிலையில்தான் அகமதாபாத்தில் இரவு நேர லாக்டவுன் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரை மீண்டும் லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது. நாளையில் இருந்து இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. பால் மற்றும் மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் இந்த நேரத்தில் மூடப்பட்டு இருக்கும். மக்கள் இந்த நேரத்தில் வெளியே செல்ல கூடாது.

குஜராத்தில் தற்போது வரை 191642 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 12,457 ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

"ஒத்துழைப்பு வேண்டும்".. கொரோனா வேக்சினுக்காக சமாதானத்திற்கு முயலும் சீனா.. கெத்து காட்டும் இந்தியா!

175462 பேர் குஜராத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.3823 பேர் இதுவரை குஜராத்தில் பலியாகி உள்ளனர். அகமதாபாத்தில் 46,268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,300 ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

41,016 பேர் அகமதாபாத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1952 பேர் இதுவரை அகமதாபாத்தில் பலியாகி உள்ளனர்.

English summary
Gujarat: Ahmedabad imposed night curfew again after raising of Coronavirus cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X