For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் பாஜக நிலைமை படுமோசம் என்றாரா முதல்வர் விஜய் ரூபானி? வைரல் ஆடியோவால் பரபரப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத்தில் பாஜக நிலைமை படுமோசம்?-முதல்வர் விஜய் ரூபானி வைரல் ஆடியோவால் பரபரப்பு- வீடியோ

    காந்திநகர்: குஜராத்தின், வத்வான் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை, முதல்வர் விஜய் ரூபானி போனில் தொடர்பு கொண்டு, வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொண்டதோடு, குஜராத்தில் பாஜக நிலைமை மோசமாக இருப்பதாகவும் கூறியதாக, ஒரு ஆடியோ, வைரலாகியுள்ளது.

    அந்த ஆடியோ போலியானது என, ஒருபக்கம் மறுப்பு குரல்கள் வந்தாலும், வத்வான் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஜெயின் சமூகத்தை சேர்ந்த, 5 வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

    குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு போன்ற மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள், குஜராத்தின் பெரும்பாலான மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து கொடுத்துள்ளன. குறிப்பாக வணிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, ஆளும் பாஜக இம்முறை சட்டசபை தேர்தலை கடும் சவாலோடு எதிர்கொள்கிறது.

    வைரலாகும் ஆடியோ

    வைரலாகும் ஆடியோ

    பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டங்களுக்கு கூட போதிய அளவுக்கு மக்கள் வருவதில்லை என்று செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்த நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும், அதை ஒப்புக்கொண்டதை போன்ற ஒரு ஆடியோ, வைரலாக சுற்றி வருகிறது. சுரேந்திரநகர் மாவட்டத்திலுள்ள, வத்வான் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர் நரேஷ்பாய் ஷாவிடம், விஜய் ரூபானி போனில் பேசியதை போல அந்த ஆடியோ ஒலி அமைந்துள்ளது.

    நிலைமை மோசம்

    நிலைமை மோசம்

    பாஜகவுக்கு இந்த தேர்தல் மிகவும் கஷ்டமானது என்றும், தனது நிலை மிக மோசம் என்றும் ரூபானி கூறுவதை போல அந்த ஆடியோ உள்ளது. மேலும் பிரதமர் மோடி தன்னை தொடர்பு கொண்டு, வெறும் 5 விழுக்காடே கொண்ட ஜெயின் சமூகத்தை சேர்ந்த உங்களுக்கு முதல்வர் பதவி வழங்கியுள்ளதை நினைத்து பாருங்கள் என கூறியதாகவும் ரூபானி தெரிவித்ததை போல ஆடியோ பதிவு உள்ளது. இதையடுத்து என்னால் உங்களுக்கு கஷ்டம் ஏற்படாது என்று நரேஷ்பாய் பதிலளிப்பதை போலவும் ஆடியோ அமைந்திருந்தது.

    ஜெயின் ஜாதியினர் கோபம்

    ஜெயின் ஜாதியினர் கோபம்

    வத்வான் தொகுதின் சிட்டிங் எம்எல்ஏவான, ஜெயின் சமூகத்தை சேர்ந்த வர்ஷாபென் தோஷிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காமல், அத்தொகுதிக்கு கட்வா பட்டிதார் ஜாதியை சேர்ந்த தான்ஜிபாய் பட்டேல் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியது. இதனால் கோபமடைந்த ஜெயின் ஜாதி சங்கம், தான்ஜிபாய்க்கு எதிராக ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஒருவரை சுயேட்சையாக போட்டியிட வைக்கப்போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் விஜய் ரூபானி இவ்வாறு தனது சமூகத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர், நரேஷ்பாய் ஷாவிடம், போனில் வேண்டுகோள்விடுத்ததாக ஆடியோ வைரலானது.

    போலி ஆடியோ

    போலி ஆடியோ

    இதுகுறித்து நரேஷ்பாய் கூறுகையில், "அந்த ஆடியோ போலியானது. இதுபற்றி சுரேந்திரநகர் கிரைம் பிராஞ்ச் போலீசில் புகார் பதிவு செய்துள்ளேன். இது ஒரு சதிச் செயல்" என்றார். வர்ஷாபென் ஜோஷி கூறுகையில், "எனக்கு போட்டியிட வாய்ப்பு தரப்படாததால் பாஜக மீது ஜெயின் சமூகத்தினர் அதிருப்தியடைந்தது உண்மைதான். ஆனால், நான் கட்சி தலைமை முடிவை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன். இதை ஜாதி அடிப்படையில் பார்க்க கூடாது என நான் எனது சமூகத்தினரை கேட்டுக்கொண்டுள்ளேன்" என தெரிவித்தார்.

    வேட்புமனு வாபஸ்

    வேட்புமனு வாபஸ்

    இதனிடையே, வத்வான் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்ததில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஐந்து சுயேட்சை வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். அதில் நரேஷ்பாய் ஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனு வாபஸ் நடவடிக்கையையும், வைரல் ஆடியோவையும் பொருத்தி பார்த்து, குஜராத் தேர்தலில் பாஜக பயந்து போய் உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    English summary
    5 Jain candidates, who had filed nomination as Independents from Wadhwan constituency, are said to have withdrawn, after an audio clip of a purported conversation between one of the Independent candidates and CM Vijay Rupani asking him to withdraw his nomination went viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X