For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா.. ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆளுநர் ஓபி கோஹ்லியிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

அஹமதாபாத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆளுநர் ஓபி கோஹ்லியிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

குஜராத் தேர்தலில் பாஜக கட்சி மீண்டும் அபாரமாக வென்று இருக்கிறது. பாஜக 99 இடங்களும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வென்று இருக்கிறது. இதனால் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.

தற்போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆளுநர் ஓபி கோஹ்லியிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். மேலும் குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேலும் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

Gujarat CM Vijay Rupani submits resignation to Governor

அதேபோல் பாஜக கட்சியின் மற்ற அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். புதிய அரசு அமையும் வரை விஜய் ரூபானி இடைக்கால முதல்வராக செயல்படுவார் என்று ஆளுநர் குறிப்பிட்டு இருக்கிறார்.

குஜராத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு மீண்டும் சில நாட்களில் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Gujarat CM Vijay Rupani and Deputy CM Nitin Patel and other ministers submit resignation to Gujarat Governor OP Kohli. Vijau Rupani will remain interim CM untill next Govt has formed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X