பிரசார மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா பாதிப்பு
அகமதாபாத்: பிரசார மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வதேதராவில் முதல்வர் விஜய் ரூபானி நேற்று பிரசாரம் செய்தார்.

மேடையில் பேசிக் கொண்டிருந்த விஜய் ரூபானி திடீரென அப்படியே மயங்கி சரிந்தார். ஆனால் அவரை பாதுகாவலர்கள் தாங்கி பிடித்து கொண்டனர்.
பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர்... பதறிடியத்தபடி கால் செய்த பிரதமர் மோடி
இதனையறிந்த பிரதமர் மோடி உடனடியாக விஜய் ரூபானியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட விஜய் ரூபானிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே விஜய் ரூபானி பிரசாரம் செய்ததாகவும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அகமதாபாத் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.