For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் ஷாக்.. காங். எம்எல்ஏவுக்கு கொரோனா-சிஎம், அமைச்சர்களை சந்தித்த சில மணிநேரத்தில் அறிவிப்பு

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. இம்ரான் கேதாவாலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் காதியா-ஜமால்பூர் தொகுதி எம்.ல்.ஏ.வாக இருப்பவர் இம்ரான் கேதாவால. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தம்மை தீவிரமாக ஈடுபடுத்தி வந்தார்.

Gujarat Cong. MLA Imran Khedawala tests positive for Coronavirus

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்தும் வந்தார். மேலும் காந்திநகரில் முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருடன் நேற்று பிற்பகல் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனையும் நடத்தியிருந்தார் இம்ரான்.

அப்போது முக கவசம் எதுவும் அணியாமல்தான் இயல்பாகவே இருந்தார் இம்ரான். இந்த சந்திப்பு பகல் 1 மணிக்கு நடைபெற்றது. இதன் பின்னர் டிஜிபி, தலைமை செயலாளர் மற்றும் பத்திரிகையாளர்களையும் இம்ரான் சந்தித்தார்.

 சிங்கப்பூரில் மின்னல் வேகத்தில் தாக்கும் கொரோனா- நேற்று ஒரே நாளில் மேலும் 334 பேருக்கு பாதிப்பு சிங்கப்பூரில் மின்னல் வேகத்தில் தாக்கும் கொரோனா- நேற்று ஒரே நாளில் மேலும் 334 பேருக்கு பாதிப்பு

இந்த நிலையில் இரவு 8 மணிக்கு இம்ரான் கேதாவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் பெரும் பரபரப்பும் அதிர்வலைகளும் ஏற்பட்டது. தற்போது இம்ரான் கேதாவால, அகமதாபாத் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

English summary
Gujarat Congress MLA Imran Khedawala tested positive for Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X