கல்வியில் பெரும் பின்னடவை சந்தித்தது குஜராத்- 18வது இடத்துக்கு தள்ளப்பட்டது!!
டெல்லி: நாட்டிலேயே முன்மாதிரியான வளர்ச்சியைக் கொண்டதாக பெருமை பேசும் குஜராத் மாநிலம் கல்வியில் பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறதாம்.
தேசிய கல்வியியல் பல்கலைக் கழகத்தின் அறிக்கையில் மாநிலங்களின் கல்வி வளர்ச்சி பற்றிய ரேங்க் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ளவை:

9வது இடத்திலிருந்து சரிந்த குஜராத்
இதில் தொடக்க கல்வியில் நாட்டிலேயே 9வது இடத்தில் இருந்த குஜராத் மாநிலம் தற்போது 18வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறதாம். அதேபோல் உயர்நிலைக் கல்வியில் 8வது இடத்தில் இருந்து 14வது இடத்துக்குப் போயுள்ளதாம் குஜராத்.

மூன்றாவது இடத்தில் தமிழகம்
தமிழகம் தொடர்ந்து கல்வி நிலையில் நாட்டிலேயே 3வது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறதாம். மகாராஷ்டிர மாநிலமும் 8வது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறதாம்.

கேரளாவுக்கும் சரிவு
கேரள மாநிலமும்கூட 7வது இடத்தில் இருந்து 14ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. மேற்கு வங்கமும் 2 இடங்கள் பின் தள்ளி 31வது இடத்தில் இருக்கிறது.

டெல்லியிலும் பின்னடவை
டெல்லியும் 6வது இடத்தில் இருந்து 11வது இடத்தை நோக்கி சரிந்து போயிருக்கிறது.

மிசோரம், மணிப்பூர் ஏறுமுகம்
24வது இடத்தில் இருந்த மணிப்பூர் 9வது இடத்திலும் 19வது இடத்தில் இருந்த மிசோரம் 10வது இடத்துக்கும் முன்னேறியிருக்கிறதாம்.