For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிர வைக்கும் குஜராத் .. 25 ஆண்டுகளாக ஒரு முஸ்லீம் கூட இதுவரை லோக்சபாவுக்கு தேர்வாகவில்லை!

Google Oneindia Tamil News

அகமதாபாத்: இந்தியாவில் மத ரீதியாக இந்துக்களுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். குஜராத் மாநிலத்திலும் இஸ்லாமியர்கள் ஏறத்தாழ 10% அளவில் வசிக்கின்றனர். ஆனால் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக அந்த மாநிலத்தில் இருந்து ஒருவர் கூட மக்களவைக்கு தேர்வாகவில்லை.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ளன. காந்தி பிறந்ததும் இந்த மாநிலம்தான், இப்போது பிரதமராக இருக்கும் மோடி பிறந்ததும் இம்மாநிலம்தான். அத்தகைய பெருமைக்குரிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் ஏறத்தாழ சம பலம் உள்ளன.

Gujarat fails to send a Muslim MP for the last 25 years

பல லட்சம் பேர்..மோடியின் மேற்கு வங்க பிரச்சாரத்தில் பெரும் கூட்டம்.. ஆட்களை சேர்த்தது இப்படித்தான்பல லட்சம் பேர்..மோடியின் மேற்கு வங்க பிரச்சாரத்தில் பெரும் கூட்டம்.. ஆட்களை சேர்த்தது இப்படித்தான்

1962 ல் முதல் தேர்தல் நடைபெற்றது. அப்போது மொத்தம் 18 தொகுதிகள்தான் இருந்தன அதில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. என்.ஜெ.பி, பிரஜா சோசியல் பார்ட்டி ஆகியவை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. அதன் பின்னர் 1967-ல் தொகுதிகள் 24 ஆக அதிகரிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 12 இடங்களை கைப்பற்றியது. சுயேச்சை ஒரு இடத்திலும், சுதந்திரா கட்சி 12 இடங்களையும் கைப்பற்றியது.

இப்படி நடந்த தேர்தல் வரலாற்றில், தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட பின்னர் 2004 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 12 இடங்களிலும் பாஜக 14 இடங்களையும் கைப்பற்றியது. 2009 தேர்தலில் அதே எண்ணிக்கையிலான இடங்களை இரு கட்சிகளும் தக்க வைத்துக் கொண்டன. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக மொத்த தொகுதிகளையும் அள்ளியது. காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

இப்படிப்பட்ட நிலையில் 1962 -ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் ஜோஹரா சவ்தா என்ற ஒரு இஸ்லாமிய வேட்பாளர் பனஸ்கந்தா தொகுதியில் வென்று மக்களவைக்கு சென்றார். அதன்பின்னர் 1977 -ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் தேர்வு செய்யப்பட்டார். 1977 -ம் ஆண்டு பரூச் தொகுதியில் இருந்து அகமது படேலும், அகமதாபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளாராக போட்டியிட்ட இஷான் ஜாப்ரி என்பவரும் இஸ்லாமிய வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

1977 ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட அகமது படேல் 1989 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் சந்து தேஷ்முக்கிடம் பரூச் தொகுதியில் தோல்வியை தழுவினார். அதன் பின்னர் குஜராத் மாநிலத்தில் ஒருவர் கூட மக்களவை உறுப்பினராக இஸ்லாமிய மதத்தில் இருந்து தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1962 முதல் காங்கிரஸ் கட்சி சார்பில் 8 பேர் இஸ்லாமிய வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டுள்ளனர். அதில் அகமது படேல் மட்டும் 1977 முதல் தேர்வு செய்யப்பட்டு வந்தார். கடந்த மக்களவை தேர்தலில் 67 இஸ்லாமியர்கள் போட்டியிட்டனர். ஆனால் அனைவரும் சுயேச்சையாக போட்டியிட்டனர். அவர்களோடு காங்கிரஸ் கட்சி சார்பில் நவ்சாரி தொகுதியில் மக்சுத் மிஸ்ரா என்ற இஸ்லாமியர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இப்படியாக கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக குஜராத் ஒரு இஸ்லாமியரை கூட மக்களவைக்கு அனுப்பவில்லை என்பது குறிப்பிடதக்கது.

English summary
Gujarat has failed to send a Muslim MP for the last 25 years. Will the treand change this time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X