For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் முதல்வருக்கு ரூ.191 கோடியில் புதிய விமானம்... 7,000 கி.மீ.தொடர்ந்து பயணிக்கும் திறன்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் அம்மாநில ஆளுநர் பயன்பாட்டுக்காக ரூ.191 கோடியில் புதிய விமானம் வாங்கப்பட்டுள்ளது.

பாம்பர் டைர் சேலஞ்சர் 650 ரக விமானமான இது 7,000 கிலோமீட்டர் வரை தொடர்ந்து பயணிக்கும் திறனுடையது.

இந்த விமானத்தை வாங்குவதற்கான நடைமுறைகள் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரம்: ஆளுநரை சந்திக்கும் பாஜக.. அடுத்தடுத்த நகர்வுகளால் பரபரக்கும் அரசியல் களம்மகாராஷ்டிரம்: ஆளுநரை சந்திக்கும் பாஜக.. அடுத்தடுத்த நகர்வுகளால் பரபரக்கும் அரசியல் களம்

ரூ.191 கோடி மதிப்பு

ரூ.191 கோடி மதிப்பு

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் குஜராத்தில் விஜய் ரூபானி முதலமைச்சராக உள்ளார். அவரது பயன்பாட்டிற்காகவும், துணை முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டிற்காகவும் அம்மாநில அரசு ரூ.191 கோடி மதிப்பில் புதிய விமானத்தை வாங்கியுள்ளது.

அதிகத் திறன்

அதிகத் திறன்

பாம்பர் டைர் சேலஞ்சர் 650 ரக விமானத்தை குஜராத் அரசு வாங்கியதற்கு காரணம் அதன் அதிகத் திறன் மற்றும் இட கட்டமைப்பு காரணம் எனக் கருதப்படுகிறது. தொடர்ந்து 7,000 கி.மீ.வரை இடைநில்லாமல் பயணிக்க முடியும் என்பதாலும், இரண்டு எஞ்சின்கள் உள்ளதாலும் குஜராத் அரசு அந்த நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது.

 பீச்கிராஃப்ட் ரகம்

பீச்கிராஃப்ட் ரகம்

குஜராத் அரசு பீச்கிராஃப்ட் ரக விமானத்தை கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வருகிறது. அதில் 9 பேர் மட்டுமே செல்லக்கூடிய வகையில் இடவசதி இருக்கிறது. மேலும், மணிக்கு 870 கி.மீ. தொலைவு வரை பயணிக்க முடியும். பீச்கிராஃப்ட் ரகத்தை காட்டிலும் பான்பர் டைர் சேலஞ்சர் ரகம் மிகுதியான திறனுடையது.

குஜராத் அரசு முடிவு

குஜராத் அரசு முடிவு

நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்காக குஜராத் முதல்வருக்கு இப்போது வாடகைக்கு விமானம் எடுக்கப்படுகிறது. அதற்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வாடகை என்பதால் புதிய விமானத்தை வாங்கியுள்ளது குஜராத் அரசு.

English summary
gujarat government purchase 191 crore flight for cm vijay rupani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X