For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த 90 இந்துக்களுக்கு குஜராத்தில் இந்திய குடியுரிமை!

பாகிஸ்தானில் இருந்து வந்த 90 இந்துக்களுக்கு குஜராத்தில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

காந்திநகர்: பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த 90 இந்துக்களுக்கு குஜராத்தில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏராளமான இந்துக்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்திய குடியுரிமை

இந்திய குடியுரிமை

இந்நிலையில் 90 இந்துக்கள் இந்தியாவில் குடியேறி நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அவர்கள் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்தனர்.

அரசிதழில் குறிப்பாணை

அரசிதழில் குறிப்பாணை

கடந்த, 2016ஆம் ஆண்டு இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் நடைமுறையில் மத்திய அரசு மாற்றம் செய்தது. இதையடுத்து, அரசிதழில் குறிப்பாணை வெளியிடப்பட்டது.

குடியுரிமை சான்றிதழ்

குடியுரிமை சான்றிதழ்

இதைத்தொடர்ந்து குஜராத்தின் ஆகமதாபாத், காந்தி நகர் மற்றும் கட்ச் மாவட்ட ஆட்சியர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் வசிக்கும், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை

இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை

இதையடுத்து ஆகமதாபாதில் நேற்று நடைபெற்ற விழாவில் 90 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்திய குடியுரிமை பெற்றவர்கள், ஆதார், பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Gujarat govt gives indian citizenship for 90 hindus from Pakistan. The 90 hindus has come from, pakistan, Bangladesh and Afghanistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X