For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா பாதித்த 18 பேரின் பெயர்களை விரைவில் வெளியிடுவோம்- குஜராத் அரசு பகீர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

அகமாதாபாத்: கொரோனா பாதித்த 18 பேரின் பெயர் விவரங்களை விரைவில் வெளியிடப் போவதாக குஜராத் அரசு அறிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

Recommended Video

    48 மணி நேரத்தில் 100 பேருக்கு பாதிப்பு... இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

    இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தை தடுக்க படுதீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு நடைமுறை, பொதுப் போக்குவரத்து தடை என பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    Gujarat Govt to announce names of Corona Cases

    நாடு முழுவதும் கொரோனா பாதித்த 75 மாவட்டங்கள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் குஜராத்திலும் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

    இது தொடர்பாக குஜராத் மாநில துணை முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சருமான நிதின் பட்டேல் கூறியதாவது: குஜராத்தில் மொத்தம் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பெயர் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

    48 மணி நேரத்தில் கொரோனா பரவுவது 100% ஆக அதிகரிப்பு.. மக்கள் ஊரடங்கு ஒரு வாரம் கட்டாயம் ஆகுமா? 48 மணி நேரத்தில் கொரோனா பரவுவது 100% ஆக அதிகரிப்பு.. மக்கள் ஊரடங்கு ஒரு வாரம் கட்டாயம் ஆகுமா?

    அதாவது இத்தகைய நபர்களை தொடர்பு கொள்வதற்கான ஒரு முன்னெச்சரிக்கையாகவே இந்த விவரங்கள் வெளியிடப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 6092 பேர் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பை மீறிய 93 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அரசு கட்டுப்பாட்டில் உள்ளனர். மொத்தம் 273 பேருக்கான ரத்த பரிசோதனைகளில் 18 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு நிதின் பட்டேல் கூறினார்.

    English summary
    Gujarat Govt will announce the names of the Corona Cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X