For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண்கள் மாயமான வழக்கு.. குஜராத் ஹைகோர்ட் கோபம்.. 10ம் தேதி வரை கெடு

Google Oneindia Tamil News

Recommended Video

    நித்தியுடன் வீடியோவில் நடிக்க வைப்பர்.. அம்பலப்படுத்திய சிறுமி

    அஹமதாபாத்: நித்தியானந்தா ஆசிரம வழக்கில் குஜராத் போலீசின் பதிலால் கோபம் அடைந்த குஜராத் உயர்நீதிமன்றம் நித்தியானந்தா ஆசிரமத்தில் மாயமான இளம்பெண்கள் டிசம்பர் 10ம தேதிக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நித்தியானந்தாவுக்கு சொந்தமாக ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த தனது இரண்டு மகள்களான லோபமுத்ரா சர்மா (21) மற்றும் நந்திதா சர்மா (18) ஆகியோரை மீட்டுத்தரக்கோரி குஜராத் உயர்நீதிமன்றததில், ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனுவை குஜராத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரம்பத், தாகெர் ஆகியோர் அமர்வு முன்பு செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இளம்பெண்களின் இருப்பிடம் குறித்து எந்தவித தகவலும் இல்லை என்று பதில் அளித்தார்.

     காதல் மணம் செய்த புது மாப்பிள்ளை.. தலையை துண்டித்த பெண் வீட்டார்.. தண்டவாளத்தில் உடல்! காதல் மணம் செய்த புது மாப்பிள்ளை.. தலையை துண்டித்த பெண் வீட்டார்.. தண்டவாளத்தில் உடல்!

    நழுவ முயற்சி

    நழுவ முயற்சி

    இதனால் கோபம் அடைந்த நீதிபதிகள் வழக்கில் இருந்து குஜராத் காவல்துறை நழுவ முயற்சிப்பதாக விமர்சித்தனர். இளம்பெண்கள் நாட்டை விட்டு வெளியேறி இருந்தால் அவர்களை மீட்க இண்டர்போல் உதவியையும் வெளியுறவுத்துறையையும் நாட குஜராத் மாநில காவல்துறைக்கு அறிவுறுத்தினர் .

    வழக்கு ஒத்திவைப்பு

    வழக்கு ஒத்திவைப்பு

    மேலும் காணாமல் போன இளம்பெண்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளித்து வரும் டிசம்பர் 10ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி வழக்கை ஒத்தவைத்தனர்.

    போலீஸ் தகவல்

    போலீஸ் தகவல்

    முன்னதாக ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களான லோபமுத்ரா சர்மா (21) மற்றும் நந்திதா சர்மா (18) ஆகியோர் வெளிநாடு தப்பி சென்று இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர்.

    விரும்பவில்லை

    விரும்பவில்லை

    இதனிடையே ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களும் முன்பு வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில், அவர்கள் நன்றாக இருப்பதாகவும், பெற்றோரைச் சந்திக்க விரும்பவில்லை என்றும், பெற்றோர்கள் மிரட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டி இருந்தனர்.

    விரும்பவில்லை

    விரும்பவில்லை

    இதனிடையே ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களும் முன்பு வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில், அவர்கள் நன்றாக இருப்பதாகவும், பெற்றோரைச் சந்திக்க விரும்பவில்லை என்றும், பெற்றோர்கள் மிரட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டி இருந்தனர்.

    ஆஜர்படுத்துங்கள்

    ஆஜர்படுத்துங்கள்

    இந்த வீடியோவை பார்த்த உயர்நீதிமன்றம் இதில் உள்ளவற்றை நம்ப முடியாது என்றும் அவர்கள் நேரடியாக அனுப்பிய ஆவணங்கள் அல்லது வீடியோக்கள் எதுவும் பரிசீலிக்கப்படாது என்றும் சகோதரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது.

    English summary
    The Gujarat High Court on Tuesday directed the State police to trace two women who went missing from the Nithyananda Ashram in Ahmedabad
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X