சூப்பர்.. இது இந்தியாவிலேயே முதல் முயற்சி.. வழக்கு விசாரணையை நேரலை செய்த குஜராத் ஹைகோர்ட்..!
காந்திநகர்: குஜராத் ஹைகோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடப்பதுடன், அது நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.. இந்தியாவியே முதல்முறையாக எடுக்கப்பட்டுள்ள இந்த புது முயற்சி பல தரப்பினராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏகப்பட்ட சேவைகள் முடங்கி போய் உள்ளன.. கடந்த 6 மாதமாகவே இந்தியாவில் இந்த நிலை தான் இருந்து வந்தது.

எந்த ஒரு அரசியல் கூட்டமாக இருந்தாலும் சரி, நிகழ்வாக இருந்தாலும் சரி, சாதாரண ஆபீஸ் மீட்டிங் என்றாலும் சரி, எல்லாமே ஆன்லைனில்தான் நடந்தது.. மாணவர்களுக்கு படிப்புகூட ஆன்லைனில்தான் நடந்து வருகிறது. இதற்கு பல்வேறு நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.. இப்படி நடத்துவதால், ஒருசில நன்மைகளும் கிடைக்கின்றன.
வேலைகள் தங்குதடையின்றி நடக்கிறது.. சுலபமாக எளிதாக பணிகள் நடக்கின்றன.. தொற்று பாதிப்பில் இருந்து நம்மால் பாதுகாத்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளும் சில மாநிலங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே நடந்து வருகிறது.. அதற்கு காரணம், பல மாநிலங்களில் இன்னும் தொற்று பாதிப்பு முழுசாக குறையவில்லை.
சென்னைக்கு செமமழையுடன் தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. கூல் செய்தி சொன்ன வெதர்மேன்
எனவே வீடியோ கான்பரஸ் மூலமாகவே முழு விசாரணைகள் நடந்து வருகின்றன. இதன் அடுத்தக்கட்டமாக குஜராத் ஹைகோர்ட்டில், வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இப்படி லைவ்-ஆக வழக்கு விசாரணை நடந்தது கிடையாது.. இன்று ஹைகோர்ட் தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு பல்வேறு வழக்குகளை இந்த ஜூம் ஆப் மூலமாகத்தான் விசாரித்தது.
நடந்த வழக்கு விசாரணைகள் எல்லாவற்றையும் ஜூம் ஆப் மூலமாகவே லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது.. கோர்ட்டில் எப்படி எல்லாம் விசாரணை நடக்கிறது என்பதை இன்றுதான் மக்கள் நேரடியாக பார்த்தனர்.. இப்படி ஒரு செயல்திட்டம் பெரும் வரவேற்பினையும் அந்த மாநிலத்தில் பெற்று வருகிறது.