For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவி அடிச்சா பயப்படாதீங்க.. நான் வந்து காப்பாத்துறேன்.. அதிர வைக்கும் காந்தி நகர் சுயேச்சை!

Google Oneindia Tamil News

காந்தி நகர்: "யாரும் கவலைப்படாதீங்க.. நான் மட்டும் எம்பி ஆயிட்டேன்னு வெச்சுக்குங்க.. மனைவிகள் கிட்ட இருந்து கணவர்களை காப்பாற்ற தனியா ஒரு சட்டமே கொண்டு வந்துடுவேன்" என்று நூதன வாக்குறுதியை ஒரு சுயேட்சை வேட்பாளர் அளித்து வருகிறார்.

மனைவியிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் பெரும்பாலும் நடக்கிற சமாச்சாரம்தான் போல இருக்கிறது. அதனால்தான் இது சம்பந்தமாக ஒருவர் தேர்தல் வாக்குறுதியே ரெடி பண்ணிட்டார்!

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. அதனால் எவ்வளவுக்கெவ்வளவு மக்களை கவர வேண்டுமோ அந்த அளவுக்கு இறங்கி போய் வேலை பார்க்கிறார்கள் நம் வேட்பாளர்கள்!

உலக வங்கியில் ரூ 4 லட்சம் கோடி கடன்.. கையில் 1.76 லட்சம் கோடி ரொக்கம்.. அதிர வைத்த சுயேச்சை! உலக வங்கியில் ரூ 4 லட்சம் கோடி கடன்.. கையில் 1.76 லட்சம் கோடி ரொக்கம்.. அதிர வைத்த சுயேச்சை!

சுயேட்சை வேட்பாளர்

சுயேட்சை வேட்பாளர்

ஒவ்வொருவரும் புது விதம்.. பிரச்சாரமும் தனி ரகம்.. அள்ளி விடும் வாக்குறுதிகளோ வேற லெவல்! அப்படித்தான் குஜராத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இவர் பெயர் தசரத் தேவ்தா. அகமதாபாத் கிழக்கு தொகுதியில் களமிறங்கி உள்ளார். இவர் மிக மிக முக்கிய பொறுப்பிலும் உள்ளார். அதாவது "மனைவியை எதிர்ப்போர் சங்கம்" என்று ஒரு சங்கம் இருக்கிறது. இதன் குஜராத் மாநில தலைவரே இவர்தானாம்!

உறுப்பினர்கள்

உறுப்பினர்கள்

இவரது நோக்கம் என்னவென்றால், "மனைவி மற்றும் அவரது உறவினர்களால் பாதிப்புக்குள்ளாகும் கணவர்களுக்கு உதவுவது" தானாம், அந்த குறிக்கோளுக்காகதான் சங்கமே ஆரம்பித்தாராம். இந்த சங்கத்தில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம்!

சட்டம்

சட்டம்

இப்போது வேட்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார். தேர்தல் வாக்குறுதியாக, "நான் மட்டும் எம்பி ஆயிட்டேன்னு வெச்சுக்குங்க.. கணவனை துன்புறுத்தும் மனைவிகளுக்கு எதிராக சட்டமே கொண்டு வர செய்வேன்" என்று சொல்லி ஓட்டு கேட்டு வருகிறாராம்!

கல்யாணம்

கல்யாணம்

அந்த 69 ஆயிரம் பேரை விடுங்க.. ஆனால் இவர் கல்யாணம் ஆனபிறகு இப்படி ஒரு சங்கம் ஆரம்பிச்சாரா? இல்லேன்னா அடுத்த வீட்டு புருஷன்களின் நிலையை பார்த்து சங்கம் ஆரம்பிச்சாரா.. அதுதான் தெரியலை!

English summary
Gujarat Independent Candidate Dashrath Devda says will voice woes of men victimised by wifes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X