For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறுமிகள் கடத்தல்:சுவாமி நித்தியானந்தா மீது குஜராத்தில் வழக்குப் பதிவு- ஆசிரம நிலத்திலும் சர்ச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    என் வயசு 18...நித்தி ஆஸ்ரமத்துல என்ன நடக்குது !

    அகமதாபாத்: சிறுமிகள் 2 பேரை கடத்தியதாக சுவாமி நித்தியானந்தா மீது குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமிகள் 2 பேரை கடத்தியதாக நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து குழந்தை தொழிலாளர்களாக ஆசிரமத்தில் தங்க வைத்து நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது வழக்கு.

    Gujarat Police probe in Nithyanandas Ahmedabad ashram

    இதில் நித்தியானந்தா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகள் குழந்தைகள் நல ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போது அவர்களை பெற்றோரிடம் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்த நிலையில் அகமதாபாத் ஆசிரமத்தில் போலீசார் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுவாமி நித்தியானந்தா 8 மாதங்களாக வெளிநாடு ஒன்றில் இருப்பதாக கூறப்படுகிறது.

    அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் நித்தியானந்தா. அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளது.

    புதிய சர்ச்சை

    தற்போது நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமம் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. அரசுக்கு சொந்தமான பள்ளிக்கூடத்துக்குரிய நிலத்தை எப்படி நித்தியானந்தா ஆசிரமம் அமைக்க குத்தகைக்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறது சிபிஎஸ்இ.

    இது தொடர்பாக குஜராத் கல்வித்துறைக்கு சிபிஎஸ்இ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    English summary
    Ahmedabad Police at ashram of self-styled godman Nithyananda after two of ashram administrators were arrested yesterday on charges of kidnapping two children.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X