For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிஜ பாகுபலி.. இரு கரங்களில் சிறுமியரை மீட்டு வெள்ளத்தில் சிங்கம் போல நடந்து வந்த சூப்பர் காப்!

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய இரு பெண் குழந்தைகளை குஜராத் காவலர் ஒருவர் தோள்களில் தூக்கிக் கொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் வெள்ளநீரில் நடந்து சென்ற சம்பவத்தால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதனால் வடமாநிலங்கள், தென்மாநிலங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், ஒடிஸா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

Gujarat Police rescues 2 children on his shoulders for 1.5 km in flood water

சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்படுகிறது. இந்த கனமழையால் அணைகள், ஆறுகள் நிரம்பி காணப்படுகின்றன. ஆறுகளில் பெரு வெள்ளப்பெருக்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது போல் பாதிக்கப்பட்ட மக்களை உள்ளூர் போலீஸும் மீட்பு படையினரும் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் மோர்பி மாவட்டத்தில் கல்யாண்பார் கிராமத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இதில் வெள்ளம் சூழ்ந்து வெளியேற முடியாமல் இரு பெண் குழந்தைகள் தவித்து வந்தன. இதை கண்ட குஜராத் போலீஸ்காரர் பிரித்விராஜ் ஜடேஜா அந்த இரு குழந்தைகளையும் தோளில் சுமந்து ஓடும் இடுப்பளவு வெள்ள நீரில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தூக்கி கொண்டு காப்பாற்றிய சம்பவத்தை அடுத்து ஜடேஜாவை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

English summary
Pruthviraj Jadeja, a Gujarat police constable carried two children on his shoulders for over 1.5 km in flood waters in Kalyanpar village of Morbi district, to safety.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X