For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: 75 நகராட்சிகளில் 45-ஐ கைப்பற்றியது பாஜக

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றியைப் பெற்றுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 75 நகராட்சிகளில் 47 பாஜக வசமானது.

குஜராத்தின் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 17-ந் தேதி நடைபெற்றது. ராஜ்கோட்டில் மிக குறைந்தபட்சமாக 50.17% வாக்குகளும் தாகோட்டில் அதிகபட்சமாக 76.7% வாக்குகளும் பதிவாகி இருந்தன.

Gujarat Poll: Out of 75 municipalities BJP wins 47, Congress 16

இந்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள 75 நகராட்சிகளில் 47 ஐ பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 16 நகராட்சிகளையும் தேசியவாத காங்கிரஸ்- 1; பகுஜன் சமாஜ் 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன. 6 நகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை; 4 நகராட்சிகளை சுயேட்சைகள் கைப்பற்றியுள்ளனர்.

மொத்தம் 2,060 உள்ளாட்சி இடங்களில் பாஜக 1167; காங்கிரஸ் 630; சுயேட்சைகள் 202; தேசியவாத காங்கிரஸ் 28; பகுஜன் சமாஜ் -15 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. மொத்தம் 2116 உள்ளாட்சி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 52 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

English summary
Bharatiya Janata Party as won 47 and Congress won 16 of 75 municipalities on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X