For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சி மாறி வாக்குப் போட்டாலும் செல்லும்.. தேர்தல் ஆணையத்திடம் அருண் ஜெட்லி முறையீடு

காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் வாக்குகளை செல்லாததது என அறிவிக்கக் கூடாது என்று மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜெட்லி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் மாநில ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அளித்த வாக்குகள் செல்லாது என அறிவிக்கக் கூடாது என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார்.

குஜராத் மாநில ராஜ்ய சபா தேர்தலில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவிற்கு வாக்களித்தனர். இதனால் இந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் 2 வாக்குகள் செல்லாததது என அறிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது.

Gujarat RS election, Arun Jaitley meets EC

இந்நிலையில், இந்த 2 வாக்குகளையும் செல்லாததது என்று அறிவிக்கக் கூடாது என்று அருண் ஜெட்லி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளார். அவருடன் மத்திய அமைச்சர் ரவி சங்கர், நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் ஆகியோரும் சென்று தேர்தல் ஆணையரைச் சந்தித்து பேசியுள்ளனர்.

மேலும், வாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும். அதில் எந்தவித தாமதமும் ஏற்படக் கூடாது என்று பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

English summary
Finance Minister Arun Jaitley visited Election commission office regarding Gujarat Rajya Sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X