For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் சர்தார் சரோவர் அணை நீர்மட்டம் வரலாறு காணாத உயர்வு.. அபாயகட்டத்தை தாண்டி நீர்மட்டம்

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தின் சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதால் அந்த நதி பாய்ந்து செல்லும் அண்டை மாநில மத்திய பிரதேச எல்லைக் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமாகிய காரணத்தால் வடமாநிலங்களில் கனமழை தொடர்கிறது. இதனால் அங்கு அணைகளின் வேகமாக நிரம்பின. பல அணைகள் நிரம்பி வழிகின்றன.

அந்த வகையில் குஜராத் மாநிலம் கேவதியாவில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இந்த அணையின் உயரம் கடந்த 2017ம் ஆண்டு 138 அடியாக உயர்த்தப்பட்டு இருந்து

Gujarat Sardar Sarovar water level reaching 134 mts, pm modi shares news on twitter

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும் மற்ற அணைகளில் இருந்து நீர்திறப்பு காரணங்களாலும் சரோவர் அணைக்கு நீர்வரத்து பெரிய அளவில் அதிகரித்தது. இதனால் சர்தார் சரோவர் அணை வரலாறு காணாத வகையில், 134 மீட்டர் நீர்மட்டத்தை எட்டியுள்ளது. மொத்த கொள்ளளவான 138.68 மீட்டரில், 133.85 மீட்டர் அளவுக்கு நீர் நிரம்பியுள்ள நிலையில், இந்த நீர்மட்டம் அபாய கட்டத்தை விட 10.57 மீட்டர் அதிகமாகும்.

இதனால் நர்மதா ஆறு பாயும் அண்டை மாநிலமான மத்திய பிரதேச மாநில எல்லையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பர்வானி மாவட்டத்திலுள்ள 21 கிராமங்களிலிருந்து சுமார் 15 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இதனிடயே வரலாற்றில் முதல்முறையாக சர்தார் சரோவர் அணை 134 அடியை எட்டியிருப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த அணையின் அருகில் தான் எஸ்டேட் ஆப் யூனிட்டி என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 182 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடிதான் கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திறந்து வைத்தார்.

English summary
pm modi shares news on twitter, the water levels at the Sardar Sarovar Dam have reached a historic 134.00 m.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X