For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சி.ஏ.ஏ. ஆதரவு, எதிர்ப்பு... தமிழகத்து கோலம் போல... குஜராத் பட்டத் திருவிழாவும் போர்க்களமானது

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத்தில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் பட்டத் திருவிழாவிலும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) ஆதரவு, எதிர்ப்பு பட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

நாடு முழுவதும் சி.ஏ.ஏ. ஆதரவு, எதிர்ப்பு போராட்டங்கள் முழு அளவில் நடைபெறுகின்றன. சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மாணவர்கள், எதிர்க்கட்சிகள் போராடுகின்றன.

அமேசானில் வறட்டி.. திருப்பூரில் உருண்டை உருண்டையாய் கடை விரித்து விற்பனை செய்யப்படும் சாணம்அமேசானில் வறட்டி.. திருப்பூரில் உருண்டை உருண்டையாய் கடை விரித்து விற்பனை செய்யப்படும் சாணம்

 கோலம் போட்டு போராட்டம்

கோலம் போட்டு போராட்டம்

அதேநேரத்தில் சி.ஏ.ஏ.வை ஆதரித்து பொதுக்கூட்டங்களையும் வீடுதோறும் பிரசாரங்களையும் பாஜக மேற்கொண்டு வருவது. தமிழகத்தில் கோலம் போட்டும் சி.ஏ.ஏ. ஆதரவு, எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டன.

 பட்ட திருவிழா

பட்ட திருவிழா

இந்த வரிசையில் குஜராத் பட்ட திருவிழாவும் இணைந்திருக்கிறது. மகர சங்கராந்தியை முன்னிட்டு பட்டத் திருவிழா நடைபெறுகிறது.

 சிஏஏ எதிர்ப்பு பட்டங்கள்

சிஏஏ எதிர்ப்பு பட்டங்கள்

இந்த ஆண்டு பட்டத் திருவிழாவில், சிஏஏவுக்கு இந்தியா எதிர்ப்பு, நோ என்பிஆர் நோ என்சிபி, அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்கிற முழக்கங்களுடன் பட்டங்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இப்படி பட்டங்கள் பறக்கும் போது பாஜக அணி சும்மா இருக்குமா என்ன?

 ஆயிரக்கணக்கான பட்டங்கள்

ஆயிரக்கணக்கான பட்டங்கள்

சி.ஏ.ஏ.வை ஆதரித்து பல்லாயிரக்கணக்கான பட்டங்களை வானில் பறக்கவிட்டுள்ளனர் பாஜகவினர். இது தொடர்ப்பாக பாஜகவின் ராஜ்கோட் நிர்வாகி கூறுகையில், 50,000 பட்டங்களை சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக பறக்கவிட்டிருக்கிறோம் என்கிறார்.

 பட்டங்களால் பதற்றம்

பட்டங்களால் பதற்றம்

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பறக்கவிட்டதிலும் சிஏஏ ஆதரவு பட்டங்கள் இருந்தன. பட்டங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் குஜராத் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

English summary
Gujarat sky also turned the battle-field with Pro-anti CAA kites ahead of Makar Sankranti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X