For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெயரையே இங்கிலீஷில் தப்பா எழுதுறது... 'மாஸா' காபி அடிக்குறது.. இதுதான் குஜராத் மாணவர்களின் யோக்யதை!

குஜராத் மாணவர்களின் கல்வித் தரம் என்பது அம்பலமாகி உள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ப்ளஸ்டூ தேர்வில் மோசமாக தோற்ற மாநிலங்கள் நீட் தேர்வில் முன்னிலை பிடித்துள்ளதாம்- வீடியோ

    அகமதாபாத்: நீட் தேர்வில் குஜராத் மாநிலம் 27-வது இடத்தைப் பெற்றிருக்கிறது. அதுவும் 45% பேர் தேர்ச்சியாம். ஆனால் இந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டில் 10-ம் வகுப்பில் தங்களுடைய பெயரையே ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாக எழுதியவர்கள்தான் ஏகப்பட்ட பேர். மிக சாதாரண ஆங்கில வார்த்தைகளான ப்ரண்ட், கிளவர், டென்னிஸ் இதைக் கூட ஆங்கிலத்தில் எழுதத் தெரியாமல் இருப்பவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் என்பது அம்பலமாகி உள்ளது.

    குஜராத் மாநில அரசின் பாடத் திட்டத்தின் கீழ் அண்மையில் நடத்தப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வுகளில் ஏகப்பட்ட பிராடுத்தனங்கள் மாஸா அரங்கேற்றப்பட்டுள்ளன. பஞ்சமால் மாவட்டத்தில் இப்படி முறைகேடுகளில் ஈடுபட்டு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வசமாக சிக்கினர்.

    Gujarat students couldn’t spell their name in English

    அதுவும் ஒரு தேர்வு மையத்தில் ஒட்டுமொத்தமாக மாணவர்கள் காபி அடிக்க அனுமதிக்கப்பட்டதும் தெரிய வந்தது. ஈயடிச்சான் காப்பி என்பார்களே அதேபோல அத்தனை பேரும் தவறுகளை அப்படியே தப்பாகவே எழுதியும் வைத்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இந்த மாணவர்கள் பலரும் தங்களது பெயரையே கூட ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாகத்தான் எழுதியிருக்கின்றனர். இது இந்த ஆண்டும் மட்டுமல்ல.. ஆண்டுதோறும் நடக்கிற பேரவலம்தான் இது.

    தமிழகத்தை ஒப்பிடுகையில் குஜராத் மாணவர்களுக்கு ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது என்பதைத்தான் இது நிரூபித்திருக்கிறது. ஆங்கிலம் மட்டுமல்ல இந்தி, சமஸ்கிருதத்திலும் இதே நிலைமைதான்.

    இந்த லட்சணத்தில் இருக்கும் மாணவர்கள், தமிழ்நாட்டு மாணவர்களை விட நீட் தேர்வில் அதிகமாக தேர்ச்சி பெற்றுவிட்டனராம்...

    எதிலோ ஏதோ வடிகிறதாம்!

    English summary
    Gujarat X class Students failed to spell even their own names in English.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X