For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காக்கிச் சட்டையில் பவர் இருக்குனு நெனச்சேன்.. ஆனால் ரேங்கில்தான் அதிகாரமே இருக்கு.. பெண் "சிங்கம்"

Google Oneindia Tamil News

சூரத்: தான் ஒரு பெண் சிங்கம் இல்லை என்றும் சாதாரண போலீஸ் அதிகாரி என்றும் தனது கடமையை செய்ததாகவும் குஜராத்தில் அமைச்சர் மகனின் காரை மடக்கிய காவலர் சுனிதா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Minister மகனை வெளுத்து வாங்கிய Woman Police | பழி வாங்கிய அமைச்சர்

    குஜராத் மாநிலம், வராச்சா சாலை எம்எல்ஏ மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. இவரது நண்பர்கள் ஊரடங்கு அமலில் உள்ள ஜூலை 8-ஆம் தேதி இரவு நேரத்தில் காரில் பயணம் செய்துள்ளார்கள்.

    அப்போது அவர்கள் மாஸ்க் அணியவில்லை. அப்போது அங்கு பணியிலிருந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தினார். அப்போது அவர்கள் அமைச்சரின் மகனுக்கு போன் செய்ததில் அவர் சம்பவ இடத்திற்கு வந்து பெண் காவலரை மிரட்டினார்.

    கன்னடம் கத்துக்கோங்க.. அதட்டும் போலீஸ்.. தெறித்து ஓடும் தமிழ் வாகன ஓட்டிகள்.. பெங்களூர் ஊரடங்கில் கன்னடம் கத்துக்கோங்க.. அதட்டும் போலீஸ்.. தெறித்து ஓடும் தமிழ் வாகன ஓட்டிகள்.. பெங்களூர் ஊரடங்கில்

    நிறுத்திய சுனிதா

    நிறுத்திய சுனிதா

    அப்போதும் அசராத அந்த பெண் காவலர் சுனிதா, யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன் என அமைச்சரின் மகனிடம் முகத்தில் அடித்தபடி தெரிவித்தார். இதையடுத்து அவர் காவல் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார். இவரை சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். சிலர் இவருக்கு பெண் சிங்கம் என்றே பெயர் வைத்துவிட்டார்கள்.

    சாதாரண அதிகாரி

    சாதாரண அதிகாரி

    இந்த நிலையில் விடுப்பில் இருந்த அவர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் நான் பெண் சிங்கம் இல்லை. சாதாரண போலீஸ் அதிகாரி. நான் எனது கடமையை செய்தேன். இது போல் எல்லா போலீஸாரும் துணிந்து செய்ய மாட்டார்கள் என பொதுமக்கள் கூறுகிறார்கள். அவ்வாறு மக்கள் கூறும் போது கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பெல்லாம் காக்கிச் சட்டையில்தான் பவர் இருக்கிறது என நினைத்தேன்.

    அமைச்சர்

    அமைச்சர்

    ஆனால் இப்போதுதான் அது கிரேட் ரேங்கில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அதனால் ஐபிஎஸ் அதிகாரியாக தயாராகி வருகிறேன். அந்த ரேங்க்தான் எனக்கு வேண்டும். அமைச்சர் மகனுடனான பிரச்சினை எளிதாக தீர்வு கண்டுவிடப்படும். எனக்கு அதிகாரப் பதவி ஏதும் இல்லாததால் அது ஒரு சூயிங் கம் மாதிரி இப்படித்தான் இருக்கும்.

    முட்டி போட

    முட்டி போட

    மக்கள் நடமாட்டம் சரியான காரணங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இந்த அமைச்சர் மகனின் நண்பர்களுக்கு அது போன்ற எந்த ஒரு காரணமும் இல்லை. என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் நான் விட்டுவிடுவேன் என நினைத்து மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் சட்டப்படி நான் எதையாவது செய்ய வேண்டும். அபராதம் விதிக்க என்னிடம் சல்லான்கள் இல்லை. அதனால் விதிகளை மீறியதற்காக அவர்களை முட்டி போட வைக்க எண்ணினேன்.

    முயற்சி

    முயற்சி

    தற்போதைய சூழலில் நான் மன உளைச்சலில் இருக்கிறேன். அதனால் ஐபிஎஸ் அதிகாரியாக நான் விரும்பவில்லை. ராணுவ அதிகாரியாக விரும்பினேன். ஒரு சில காரணங்களுக்காக அது போல் என்னால் ஆக முடியவில்லை. ஐபிஎஸ் அதிகாரிக்கான தேர்வில் தோல்வி அடைந்தால், வழக்கறிஞராகவோ பத்திரிகையாளராகவோ ஆக முயற்சிப்பேன் என்றார் சுனிதா யாதவ்.

    English summary
    Gujarat Police Constable Sunita Yadav says that she is not laady Singham as she is a simple Lok Rakshak Dal officer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X