For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பிரதமரே வந்தாலும் இதுதான்".. அமைச்சர் மகனை லெப்ட் ரைட் வாங்கிய போலீஸ் சுனிதா.. கட்டாய ராஜினாமாவா?

குஜராத் பெண் போலீஸ் சுனிதாவுக்கு ஆதரவு பெருகி வருகின்றன

Google Oneindia Tamil News

காந்திநகர்: "இந்த நேரத்தில் பிரதமர் மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்.. இஷ்டத்துக்கு ஊர் சுத்தறீங்க.. நான் உன் வீட்டு வேலைக்காரி இல்லை, உனக்கு அடிமையும் இல்லை" என்று அமைச்சர் மகனை கேள்வி கேட்ட பெண் போலீஸ் சுனிதாவுக்கு சோஷியல் மீடியாவில் ஆதரவு பெருகி வருகின்றன.. சுனிதா அளித்த ராஜினாமா கடிதமும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    Minister மகனை வெளுத்து வாங்கிய Woman Police | பழி வாங்கிய அமைச்சர்

    குஜராத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானி.. இவரது மகன் பிரகாஷ் கனானி... கடந்த புதன்கிழமை இவர் காரில் ஊரை சுற்றி வந்துள்ளார்.. அந்த காரில் நண்பர்களும் இருந்துள்ளனர்.. லாக்டவுன் விதிகளை மீறி, ரொம்ப நேரமாக சுற்றிக் கொண்டு இருக்கவும், அந்த காரை வாகன போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    விசாரணை மேற்கொண்டது சுனிதா என்ற பெண் போலீஸ்.. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், 'நான் யார் தெரியுமா?.. எம்எல்ஏ மகன்' என்றார்.. உடனே சுனிதா, "நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ.. எம்எல்ஏ மகன்-ன்னா, உனக்கு கொரோனா வராதா? லாக்டவுனில் இப்படி தேவையில்லாமல் வெளியே ஊர் சுற்றுவது குற்றம்னு தெரியாதா? என்று கேட்டார்.

    விகாஸ் துபே கூட்டாளி குட்டன்- சாலை மார்க்கமாக மகாராஷ்டிராவில் இருந்து உபிக்கு கொண்டு செல்லும் போலீஸ்விகாஸ் துபே கூட்டாளி குட்டன்- சாலை மார்க்கமாக மகாராஷ்டிராவில் இருந்து உபிக்கு கொண்டு செல்லும் போலீஸ்

    பிரகாஷ்

    பிரகாஷ்

    சுனிதா இப்படி கேட்டதும் பிரகாஷூக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது.. உடனே தன் போனை எடுத்து அப்பாவிடம் பேசினார்.. நடந்ததை எல்லாம் படபடவென சொன்னார்.. உடனே நேர்ல கிளம்பி வருமாறும் சொன்னார்.. பிறகு பிரகாஷ் தொடர்ந்து சுனிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    கொரோனா

    கொரோனா

    ஒரு கட்டத்தில் பெண் போலீஸை மிரட்டினார்.. ஆனால் எதுக்குமே சுனிதா அசரவே இல்லை.. "கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? இந்த நேரத்தில் பிரதமர் மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்.. 12 மணி வரை டியூட்டிக்கு நிற்கும் நாங்கள் என்ன முட்டாளுங்களா? உங்கள் இஷ்டத்துக்கு ஊரை சுற்றுகிறீர்களே" என்றார்.

    இன்ஸ்பெக்டர்

    இன்ஸ்பெக்டர்

    இதற்கு பிரகாஷ், "உன்னை 365 நாளும் இதே இடத்தில் நிற்க வைப்பேன்" என்றார்.. அதற்கு சுனிதா,"நான் உன் வீட்டு வேலைக்காரி இல்லை, உனக்கு அடிமையும் இல்லை" என்று சொல்லி, ஸ்டேஷனுக்கு விஷயத்தை சொன்னார். ஆனால், இன்ஸ்பெக்டரோ, "அவங்களை அங்கேயே விட்டுட்டு ஸ்டேஷனுக்கு வந்து சேருங்க" என்று சொன்னார்.

    கண்டனம்

    கண்டனம்

    இதனிடையே, இந்த சம்பவத்தைதான் அங்கிருந்த யாரோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விட்டனர்.. இதற்கு சுனிதாவுக்கு பாராட்டு மேல் பாராட்டு கிடைத்து வருகிறது.. பிரகாஷுக்கு கண்டனம் மேல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவத்துக்கு பிறகு சுனிதா தலைமை காவல் நிலையத்துக்கு உடனே டிரான்ஸ்ர் செய்யப்பட்டார். சுனிதாவை ஏன் டிரான்ஸ்பர் செய்தீர்கள் என்று கேள்விகள் அடுத்தடுத்து சோஷியல் மீடியாவில் எழ ஆரம்பித்தன.

    பரிசீலனை?

    பரிசீலனை?

    பொதுமக்களின் ஆதரவும் பெருகியபடியே உள்ளது... இந்த சமயத்தில், சுனிதா தனது வேலையை ராஜினாமாவே செய்துவிட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவித்தன. கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி அவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கி உள்ளதாகவும்சொல்லப்பட்டது. இதனால் இணையவாசிகள் மேலும் கொந்தளித்துவிட்டனர். சுனிதாவுக்கு முழுமையான ஆதரவையும் வழங்கி வருகின்றனர். தற்போது அந்த ராஜினாமா கடிதம் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English summary
    gujarat woman police sunitha yadav resignation issues
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X