For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சை கருத்து… கவுகாத்தி கல்லூரி பேராசிரியை கைது

Google Oneindia Tamil News

கவுகாத்தி: இந்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவுகாத்தி கல்லூரி பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் வர்த்தக ரீதியான உறவுகள், அரசியல் ரீதியான செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

Guwahati professor arrested for controversial remarks on armed forces after pulwama terror attack

இந் நிலையில், கவுகாத்தியில் உள்ள கல்லூரி ஒன்றின் ஆங்கில துறையின் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருபவர் பாப்ரி பானர்ஜி. புல்வாமா தாக்குதல் குறித்து அவர் முகநூலில் வெளியிட்ட தொடர்ச்சியான கருத்துகள் சமூக வலை தளங்களில் வைரலானது.

முகநூலில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள் இதுதான்: 45 இளம் வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இது போர் அல்ல.. அவர்களுக்கு திரும்ப சண்டையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை

.
இது கோழைத்தனத்தின் உச்சக்கட்டம்.. இது இந்தியர்களின் இதயத்தை உடைக்கக்கூடிய செய்தி.. ஆனால் பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..?

நீங்கள் அவர்களின் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறீர்கள்.. அவர்களின் குழந்தைகளை கொலை செய்கிறீர்கள்.. நீங்கள் அங்குள்ள ஆண்களை படுகொலை செய்கிறீர்கள்.. உங்கள் ஊடகங்கள் அவர்களை அச்சுறுத்துகின்றன.

ஆனால் நீங்கள் பதிலடி இல்லை என்று நினைகிறீர்களா..? உங்களுக்கு தெரியுமா.. தீவிரவாதம் வேண்டுமானால் இஸ்லாமை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் கர்மா மிக முக்கியமானது.. அதை அனுபவியுங்கள் என்று பாப்ரி பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனைதொடர்ந்து அசாம் போலீஸ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில், கல்லூரி நிர்வாகமும் பாப்ரி பானர்ஜியை இடைநீக்கம் செய்தது.

English summary
A College professor in Guwahati has been arrested by police after her remarks on Indian armed forces following the Pulwama terror attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X