For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விசா விதிமுறைகளை நாங்கள் மீறவில்லை: டி.சி.எஸ்., இன்போசிஸ் விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவுக்கான எச்.1பி விசா விதிகளை மீறுவதாக எழுந்துள்ள புகார்களை டி.சி.எஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் மறுத்துள்ளன.

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி பணிக்காக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு ‘எச் 1 பி' விசா வழங்கி வருகிறது. இந்த விசாவுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.

H-1B visa row: TCS, Infosys say they are fully compliant with visa rules

ஆனால், ‘எச் 1 பி' விசா, விதிகளை மீறி தவறாக பயன்படுத்தப்படுவதாக அமெரிக்காவில் புகார்கள் கிளம்பி உள்ளன.இந்தியாவை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ், இன்போசிஸ் ஆகியவை ஒப்பந்தம் மூலம் ஆட்களை சப்ளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்குள்ள முக்கிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்து விட்டு, அந்த இடத்தில் ‘எச் 1 பி' விசா வைத்திருக்கிற இந்தியர்கள் நியமனம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் தொழிலாளர் துறை இது குறித்து விசாரிக்க துவங்கியுள்ளது.

இந்த நிலையில், புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள இன்போஸிஸ் நிறுவனம், இந்த பிரச்சினையில் அவர்களுக்கு உதவ அமெரிக்காவின் தொழிலாளர் துறையுடன் தொடர்பில் உள்ளோம். இன்போஸிஸ் விசா நடைமுறை குறித்து விசாரிப்பது தொடர்பாக எங்களுக்கு அறிகுறிகளும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் டிசிஎஸ் நிறுவனமும் எச்.1 பி விசா விதிமுறைகள் உட்பட அனைத்து விதிமுறைகளையும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

English summary
Being probed for alleged visa rule violations in the US, Indian software services giants Tata Consultancy Services (TCS) and Infosys today said they are "fully compliant" with the immigration rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X