For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெச்-4 விசா விதிமுறையில் மாற்றம்.. கூகுள், பேஸ்புக் போர்க்கொடி.. இந்தியர்களுக்கு கிடைக்குமா நிம்மதி?

ட்ரம்ப் அரசின் புதிய விசா திட்டத்தால், பாதிப்பு அதிகம் என்று, சிலிக்கான் வேலியிலுள்ள FWD.US அமைப்பு அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஹெச்1-பி வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் ஹெச்-4 விசாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளதற்கு கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கூட்டமைப்பு அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சியின்போது, அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1-பி விசா வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவியும் அமெரிக்காவில் பணியாற்றும் வகையில் ஹெச்-4 விசா வழங்கப்பட்டது.

ஒபாமாவின் இந்த விசா சலுகையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம், தற்போது ஹெச்-4 விசாவின் கீழ் பணியாற்றி வரும் சுமார் 70 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்தியர்களுக்கு விசா பயன்

இந்தியர்களுக்கு விசா பயன்

பிற நாடுகளை சேர்ந்த அதிகத் திறன் வாய்ந்த ஊழியர்கள் அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வகையில் ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது. இவர்களது கணவன் அல்லது மனைவியும் அமெரிக்காவில் பணி வாய்ப்பு பெறும் வகையில் ஒபாமா அரசு சிறப்பு சலுகையை வழங்கியிருந்தது. இந்த சலுகையினால் இந்தியர்களே அதிகம் பயன்பெற்றனர்.

ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பு கண்டனம்

ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பு கண்டனம்

ட்ரம்ப் அரசின் புதிய திட்டத்தால், பாதிப்பு அதிகம் என்று, சிலிக்கான் வேலியிலுள்ள FWD.US அமைப்பு அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பை பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தோற்றுவித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை பின்வரும் வரிகளில் பாருங்கள்.

அமெரிக்க நிரந்தர குடியுரிமை

அமெரிக்க நிரந்தர குடியுரிமை

ஹெச்-4 விசா பாலிசி முக்கியமானது. ஏனெனில், வாழ்க்கைத்துணை நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு காத்திராமல் போதிய அளவுக்கு வேலை வாய்ப்பை கொடுத்து வந்தது. நிரந்தர குடியுரிமை பெற அவர்களில் பலர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. ஹெச்-4 விசா வைத்துள்ளோர்களில் சுமார் 80 விழுக்காடு பேர் பெண்கள். அதில் பெரும்பாலானோர் வெற்றிகரமாக பணியாற்றி வருகிறார்கள். அட்வான்ஸ் டிகிரி படிப்புகளை தங்கள் தாயகத்தில் முடித்துவிட்டுதான் வாழ்க்கை துணையோடு அவர்கள் அமெரிக்கா வருபவர்களாகவும் உள்ளனர்.

வரி வருவாய்

வரி வருவாய்

ஹெச்-4 பணி அங்கீகாரம் இல்லாவிட்டால், ஹெச்-1பி விசா வைத்துள்ள திறமைமிக்க ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி தங்கள் குடும்பத்திற்கு நிதி பங்களிப்பை அளிக்க முடியாது. அவர்கள் சம்பளத்தில் இருந்து கிடைக்கும் வரியும் கிடைக்காது. இவ்வாறு அந்த அறிக்கை மேலும் சுட்டிக் காட்டியுள்ளது. பெரு நிறுவனங்களின் இந்த அதிருப்தியை ட்ரம்ப் நிர்வாகம் கருத்தில் கொள்ளுமா என்பதை வரும் நாட்களில் பார்க்க வேண்டும்.

English summary
Influential law makers and representative of the American IT industry, including Facebook, have opposed the Trump administration's proposed plan to withdraw work permits to H-4 visa holders, who are spouses of H-1B visa holders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X